sahirians

Zahirians’12 ற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவானார்கள்..!!புதிய மாப்பிள்ளைகள் சாஹிராவுக்கு புதிதாக ஏதும் செய்வார்களா..?

· · 514 Views

Zahirians’12 இன் வருடாந்த பொதுக்கூட்டம் 2016 மூன்று வருடங்களை வெற்றிகரமாக கழித்து கடந்து வந்த ஆண்டினை மீட்டிப்பார்பதற்கும் நான்காவது ஆண்டினை ஆரம்பிப்பதற்குமான Zahirians’12 வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் சகோதரர் நசீப் இன் தலைமையில் வழமைப்போல் டிசம்பர் 25 ஆம் திகதி புத்தளம் கலாச்சார மண்டபத்தில் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைப்பெற்றது.

 

நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கடந்த வருடத்தின் எம் அமைப்பிற்கு பல வழிகளில் உதவிய தொழிலதிபர் அலி சிமாக் அவர்களும், Silent Volunteers மற்றும் RIZKey Guys அமைப்பின் அங்கத்தவர்கள், சகோதரர் பாதி  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அல்குர்ஆனின் சில வசனங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. வழமைப்போல் இரண்டு பாகமாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் , முதல் பாகத்தில், கடந்து வந்த வருடத்தில் எம்மால் செய்யப்பட மற்றும் நாம் பங்குபற்றிய சமூகநல வேலைத்திட்டங்களை மீட்டிப்பார்த்ததுடன் அதில் நாம் சந்தித்த சவால்கள் பற்றியும் அலசி ஆராயப்பட்டது.

மேலும் கடந்த வருடத்தில் எமக்கு உதவிய அணைவரும் அவர்களது சமூக நல நோக்கத்தை பாட்டும் வகையில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்க்கபட்டனர். சகோதரர் சிமாக் அவர்களால் ஆற்றப்பட்ட அதிதி உரையின் போது கடந்த வருடம் நாம் செய்த ஒரு முக்கியமான வேலைத்திட்டமான சாஹிரா கல்லூரியின் சாதாரண தரத்தில் மேல்லக் கற்போருக்கான விசேட கணித வகுப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு காட்டியதோடு அதை இனி வரும் காலங்களில் தொடர்ந்து கொண்டுசெல்லுமாறு அறிவுரையும் வழங்கினார்.

மேலும் அதற்கான பண உதவியும் வழங்கிசென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாம் பாதியின் பொது வழமை போல் வருட இறுதி அறிக்கையின் பின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 2017 ஆண்டிற்கான புதிய தலைவராக சகோதரர் Mohamed ஷராபாத்  அவர்கள் தெரிவு செய்யபட்டார்.

20 பேர் அடங்கிய நிர்வாக குழுவில் இம்முறை விசேடமாக Zahirians’12 ஐ வெளிநாடுகளில் நிறுவுவதன் முதல் கட்டமாக வெளிநாட்டில் இருக்கும் 5 நண்பர்களும் நிர்வாகத்தில் செர்த்துகொள்ளபட்டனர். முன்னைய நிர்வாகத்தால் அனைத்து ஆவணங்களும் புதிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதுடன் நிகழ்வு சலவாத்துடன் நிறைவுபெற்றது.

sahirians

2017 ஆண்டிற்கான நிர்வாக குழு, தலைவர் : R.K.M. Sharafath

செயலாளர் : MN Abdhul Fathir

ஒருங்கிணைப்பாளர் : AWM Naseef

பொருளாளர் : RM Sifras

உப தலைவர்கள் :

MR Aadhil salahi SM Faalih

துணை செயலாளர் : ABA Asam

பிரதி ஒருங்கிணைப்பாளர் : AJM Azmin

 ஊடக பொறுப்பாளர்கள் : MAHM Nafly Hussain IM Imran

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் : HM Hanan Ahmed ARM Roshan Ashraf

நிர்வாக குழு உறுப்பினர்கள் : MF Awshaf Ahmed ARH Hanoos Shareef M Muazzam

வெளிநாட்டு உறுப்பினர்கள் : HR Afeef Ahmed – Canada

SAM Ilham Dheen – Saudi Arabia MIM Ishan – Dubhai

AWM Afrah – Qatar

IM Nasadh Ahmed – Saudi Arabia

புதிய நிர்வாகக்குழுவின் முதல் கூட்டம் நேற்றைய தினம்(2017.0106) தலைவர் Sharafath இன் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைப்பெற்ற போது இனி வரும் கால செயற்திட்டங்கள் பற்றிய சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Zahirians’12 Media

Leave a Reply

Your email address will not be published.