Video: ஐயகோ..நல்லாட்சி : முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறு பன்சலைகளில் விடுக்கப்பட்ட கோரிக்கை வெற்றி..!! முஸ்லிம் முன்னணி நிறுவனங்களின் விற்பனையில் வீழ்ச்சி

· · 744 Views
முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான முன்னனிஆடை நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை வலையமைப்பு ஒன்றின் உயரதிகாரி ஒருவர்   தெரிவித்தார்.
https://www.facebook.com/theputtalamtoday/videos/1585879554816031/
அண்மைக்காலமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு நாடு தழுவிய ரீதியில்  சில கடும்போக்குவாதிகளால் கோஷங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இந்த வருட பண்டிகை கால விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பண்டிக்கைக்கால வியாபாரம் சிறிது பின்னனடைவை சந்தித்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
IMG_1511
எது எவ்வாராயினும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிப்பு செய்யுமாறு தொடர்ச்சியாக விகாரைகள் முதல்கொண்டு மேற்கொள்ளப்படும் மூளைசலவை காரணமாக  இலங்கையின் முன்னணியில் இருந்த  பல முக்கிய வர்த்தக நிலையங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது மிக மலிவாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் கண்டி நகரில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான இரு முக்கிய ஆடை விற்பனை கிளை நிறுவனங்களில் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ஊர்ஜிதமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது வர்த்தக நிலையங்களின் வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில்  அண்மையில் கண்டி நகரில் புதிதாக திறக்கப்பட்ட பெரும்பான்மை முன்னணி ஆடை விற்பனை  நிலையத்தின் ஒரு நாள் வியாபாராம் மாத்திரம் 4 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராக சட்டத்தை கொண்டுவருவதன் ஊடாகவே நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.பெரும்பான்மை மக்களை திருப்தி படுத்த செயலாற்றும் இந்த அரசிடம் வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டுவரும் என நாம் எதிர்பார்க்க முடியும் என்பது சந்தேகமே

Leave a Reply

Your email address will not be published.