U.N.P. யின் ரவி கருணாநாயக்க மீண்டும் அமைச்சராகிறார் !! U.N.P. யின் நான்கு தேசியப் பட்டியல் எம்பிக்கள் பதவி நீக்கம

· · 944 Views

வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யும் போது, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படும் என கட்சியின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அவரின் நண்பர் குழு ஆதரவை வழங்கியிருந்தது.

 

 

 

தனக்கு அமைச்சு பதவி வழங்கினால் மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக, நானும் எனது நண்பர்களும் வாக்களிப்போம் என ரவி கருணாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோடு மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

இதனால் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதால் அவருக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் தேசியப் பட்டியலில் தெரிவாகி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நான்று பேரை பதவி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

எக் காரணத்திற்காக இவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

 

 

எனினும் குறித்த வெற்றிடங்களுக்கு மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட கூடிய நான்கு இளைஞர்களை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.