dr-haniffa-puttalam

The legend : புத்தளத்தின் நலனுக்காக அயராது பாடுபட்ட டாக்டர்.ஹனீபா வபாத்தானார்கள்..!!

· · 1265 Views

புத்தளத்தின் கௌரவப் பிரஜையும், மூத்த வைத்தியருமான அல்ஹாஜ்.Dr.ஹனீபா அவர்கள் இன்று நண்பகல் 1.00 மணியளவில் புத்தளம் தள வைத்தியசாலையில் காலமானார்..இன்னாளில்லாஹி வயின்னாளில்லாஹி ராஜிவூன்.

dr-haniffa-puttalam

வபாத்தான Dr.  ஹனீபா அவர்கள்  தென்னிந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் புகழ் பூத்த மருத்துவக் கல்லூரியான அலகாபாத் மருத்துப் பல்கலையில் வைத்தியராக பட்டம் பெற்றவராவார்.

புத்தளத்தின் மூவினமக்களுக்கும் இரண்டு தசாப்த காலம் மருத்துவ சேவை செய்த Dr.ஹனீபா அவர்கள், ஒரு மகத்தான சேவையாக இறப்பு – பிறப்பு பதிவாளராகவும் நெடுங்காலம் பணியாற்றி புத்தளம் மக்களுக்கு என்றுமே ஒரு மறக்க முடியாத சேவையை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 9.00 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரை பிரிந்து நிற்கும் குடும்பத்தாருக்கு புத்தளம் மக்கள் சார்ப்பில் புத்தளம் டுடே தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஏ.ஏன்.எம்.பௌமி நெய்னாமரைக்கார்

புகைப்பட உதவி : நன்றி : puttalam online

2 comments

Leave a Reply

Your email address will not be published.