The king maker : புத்தளத்திற்காக கல்பிட்டி..!! ” சொன்னதை செய்துள்ளேன்..பாயிஸ் பெருமிதம்

· · 2195 Views

” கடந்த வாரம் முழுவதும் எமது தலைவருடனும் என்னோடும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மலிக் சமரவீர, கபீர் ஹாசீம் போன்றோர்  தொடர்பு கொண்டு கல்பிட்டியில்  ஐக்கியத் தேசியக் கட்சி ஆட்சியமைக்க உதவுமாறு வேண்டினார்கள்.

 

 

 

என்றாலும் எம் கட்சி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. புத்தளத்தில் ஐக்கியத் தேசியக் கட்சி எம்மை  கருவறுக்கப் பார்த்த சந்தர்ப்பத்தில் எமக்கு கைக் கொடுத்த  மக்கள் பெரமுனவையும் சுதந்திரக் கட்சியையும் நானோ எனது கட்சியோ மறக்கவில்லை. அதற்க்கான நன்றிக் கடனையே நாம் கல்பிட்டியில் செய்துள்ளோம்.கல்பிட்டி ஊடாக நாம் புதிய வரலாறு படைத்திருக்கின்றோம். புத்தளத்திற்காக கல்பிட்டி. இதுவே எமது நன்றிக் கடன்.

 

 

இன்று இடம் பெற்ற கல்பிட்டி பிரதேசபையின் தலைவர் தெரிவுக்குப் பின்னர் நம்மிடம் பேசிய புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

 

 

நமது இந்த பொதுக் கூட்டமைப்பை நாம் தொடர்வோம். வண்ணாத்திவில்லு, புத்தளம் பிரதேஷ சபை என நாம் எமது கூட்டாச்சியை கொண்டு செல்வோம். காசு , பணத்தால் எப்போதும் எல்லோரையும் வாங்கலாம் என்ற சிலரின் நம்பிக்கைக்கு  நாம் மீண்டும் சாவு மணி அடித்துள்ளோம். எங்களுடையது மக்களுக்கான மக்கள் கூட்டணி.

 

 

இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும், புத்தளம் நகர சபைத் தலைவருமான கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

3 comments

Leave a Reply

Your email address will not be published.