The End : ” நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்..!! அதோடு அவரது விளையாட்டு வாழ்க்கை முடிகிறது

· · 473 Views

இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்.

 

 

 

 

 

இலங்கை முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான சங்ககாரா, 2015ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2014ம் ஆண்டே டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

 

ஓய்வு பெற்ற சங்ககாரா தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.

 

 

 

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் Lancashire அணியில் சங்ககாரா விளையாடி வருகிறார்.

 

 

 

எதிர்வரும் 25ஆம் திகதி மான்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் லங்காஷயர், சர்ரே அணிகள் மோதவுள்ளன. இதுவே சங்ககாரா விளையாடும் கடைசி முதல் தர போட்டியாகும்.

 

 

இந்த போட்டியுடன் சங்ககாராவின் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமாக முடிவுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.