The Crescent lodge :” புத்தளத்தின் மௌலீது பாரம்பரியத்தைக் கொண்டாடும் கோட்டைப்புரத்து அரண்மனை – ஒரு சரித்திரத்தின் கதை – E.S.M. வீடு

· · 1811 Views

” ம‌ரைக்கார் வீட்டுப் பக்கம் போய் வர நேரம் இருக்குமா?”  என  புத்தளம்டுடே எட்மின் கேட்டபோது  ”ஏன் மரிக்கார் வீட்டுக்கு என்று கேட்டேன்.  அங்கு இன்று மௌலீது நடக்கிறது ” என்றார்  சுவாரிசயமாக இருந்தது.  பழையன கழிதலும், புதியன புகுதலும் துரிமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் நாட்களிலே  பாரம் பரியங்கள் பேணிக் காகக்கப்படுகின்ற இடங்களுக்குப் போய்  அவற்றை அவதானிப்பதில் ஒரு தனித்துவமான இன்பம்தான்.

mv

காலை பத்து மணிக்கு மரைக்கார் வீடு நோக்கிப் புறப்பட்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் உண்மையாகாவே செல்வத்தாலும், அதிகாரத்தாலும் புத்தளத்தை ஆண்ட அந்த பிரம்மாண்டமான பங்களாவை அடைந்தோம். புத்தளம் அரசியலின் பிதா மகனான முன்னாள் நியத்மைச்சர் எம்.எச்.எம். நெய்னா மரைக்காரின் பங்களாவோடு சேர்த்து 7 ஏக்கரில் பறந்து விரிந்து கிடக்கிறது கிரசன்ட் லொட்ஜ்.

mv-18

”மரைக்கார் வீடு” என்றுதான் இது வரையும் நமக்கும் தெரியும். முன்னாள்  நிதியமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். நயினா மரிக்காரின் புதல்வர் ஹஸீப் அவர்களிடம் கேட்டபோதுதான்  அந்த பழைய மாளிகையின்  பெயர் ” கிரஸன்ட் லொஜ்” என்று தெரியவந்தது.

mv-2

ஒட்ட நறுக்கப்பட்ட இடைக்கி‌டையே நரைத்த தாடி. ”ஷெய்கு  ஒருவரின் தோற்தைக் கொடுத்த சாம்பல் நிற நீண்ட அங்கி, தலைப்பாகையுடன் கண்டபோது  என்னால் அந்த மனிதரை அடையாளம் காண முடியாமல் போய்விட்டது.  நாம் அவருடன் பேச்சுக் கொடுக்க முன்னர் ” து-ஆ தொடங்கப் போகிறது” என்று ஒருவர் ஒடிவந்து சொல்ல  பிறகு சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு அவர் உள்ளே அவரச அவசரமாகப் போய்விட்டார்.ஹசீபிடம் இன்னும் நெய்னா மரைக்கார் வீட்டுக் கெத்து அப்படியேஇருக்கிறது.

mv-17

நாமும்  அவ‌ரைத் தொடர்ந்து உள்ளே போனபோது  அந்த பழைய மாளிகையின்  நடுப்பறமாக  இருந்த அகன்ற நிலா முற்றத்தில்   மௌலிது சோறு சமைப்பவர்கள்  சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள.   ” யானபி  ஸலாம் அலைக்கும்,  யாரசூல் ஸலாம் அலைக்கும்……….. உச்ச சுரத்தில் வந்து கொண்டிருந்தது.  வெளியே  ஒலிபெருக்கி ஊடாகவும்  அந்த மௌலீது பைத் காற்றோடு கரைந்து ஒரு வித பக்திச் சுவையைப் பொழிந்து கொண்டிருந்தது.எதோ கடையாமட்டைப் பக்கம் கோடி பள்ளிக்கு போன மாதிரி ஒரு பீலிங்.

mv-3

ஆயிரம்தான் புரியாணியும், கோழிக் குறுமாவும் சமைத்தாலும் தேங்காய் சோறும்,   மாட்டிறைச்சி கிழங்கு, பருப்புக்  க‌றியுடன் கலந்த மௌலீது சோற்றுக்கு ஒரு தனிச் சசுவை இருக்கும் உள்ளது என்பதில்  புத்தளத்தில் அநேகருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த மணம் எமக்கும் வாயில் எச்சில் ஊறச் செய்தது.போகும் போது ஒரு சொப்பிங் பேக்கில் கிடைத்தது.வாழ்க E.S.M.மாமா.

”எவ்வளவு காலமாக இந்த சடங்கைச் செய்து வருகிறீர்கள்?”  என்று கேட்டோம்.     அந்தக் காலத்திலே கொள்ளுப் பாட்டனாரான  ”ஈனாச்  சேனா  மூனா” காலத்தில்  இருந்து நடக்கும் காரியம் என்றாலும் தனது  அனுசரனையுடன் 1971 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது என்று சொல்லிவிட்டு அந்த காரியத்தில் தனக்கு உற்ற துணையாக இருந்து செயற்படும் லத்தீபையும் எமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

mv-4

அங்கு ஒரு இனம் புரியாத  ஒரு சூழ் நிலை நிலவியதை உணர முடிகிறது.  அதை இப்படி என்று வார்தைகளால் வருணிக்க முடியவில்லை.   ஒரு வித மகிழ்வு, ஒரு வித இன்ப உணர்வு,  ஒரு வித  பக்தி சுவை நணி சொட்டும் கோலம்.  நடு மண்டபத்தில் மௌலீது ஓருகிறார்கள்,  அதை ஒட்டினாற் போலுள்ள பின் வராந்தாவில் பெருவளவுப் பெண்டிர் கதிரைகளில் அமரந்திருந்தார்கள். எல்லோர் வையில் ஒரு புத்தகம் இருப்பதாககத் தெரிகிறது. பெரும்பாலும் மௌலீது கிதாபாக இருக்க வேண்டும்.  ஓசையின்றி ஓதிக் கொண்டிருக்கிறாரகள்.

துயில் வெள்ளை ஜுப்பாக்களுடன்  தில்லையடி முபாரக் மௌலவியின் மத்ரஸா மாணவர்கள் காணப்படுகிறார்கள்.  இடைக்கிடையே    நீதியரசர் சலீம் மவ்சூப் அவர்கள் இங்கும் அங்கு நடப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.பாச்சோரை ருசித்திக் கொண்டிருந்தார்.

mv-5

காலா காலமாக நடக்கும் அந்த மௌலீது வைபவத்தைப் பற்றி நிறையப் பேச எதும் இல்லை.    மரைக்கார் வீட்டைச் சுற்றிப் பாரக்க புத்தளம் டுடே எட்மின் ஒரு பிரேணையை முன்வைத்தது.  ஆனாலும்   மர்ஹூம் நயினா மரிக்காரின் மகன் ஹஸீப் அவர்கள்  கொஞஞம்  அவகாசம் எடுத்து எம்முடன் கலந்து கொள்ளும் வ‌ரையில்  காத்திருக்க வேண்டி இருந்தது.

“கிரஸன்ட லொஜ்”  நின்றிருந்த ஏழு ஏக்கர் நிலத்தில் ஒரு கோடியில் மர்ஹும்  நயினா மரிக்காரின் விஸாசமான வாஸஸ்தலத்தில் அமர்திருந்தோம்.    காத்திருந்த எமக்கு  பாற்சோறும், குளிர் பாணமும் தந்து உபசரிக்க அந்த இல்லங்களின்   சேகவர்கள் தவறவில்லை.   சற்று நேரத்துக்கொல்லாம்  ஜனாப் ஹஸீப் எம்முடன் வந்து சேர்ந்து கொண்டார்.

mv-6

“கிரஸன்ட் லொஜ்ஜைச்” சுற்றிப் பார்க்க அவரை வழி தொடர்ந்தோம்.  அந்தக் காலத்தை விட இந்த இந்தக் காலத்தில்தான் இதை ஆடம்பரமாக மாளிகை என்று சொல்ல வேண்டும் போல் எனக்குப் பட்டது.  யாருக்கும்  அதன் வயது தெரியவில்லை.  ஹஸீப் அவர்கள்  அந்தநாள் வானொலி,சினிமாப் பாடகர் லாகீர்  அவர்களை  அறிமுகப்படுத்தி இவரிடன் கேளுங்கள் என்றார்.  அவ்வளவாக வயது வெளியில் தோற்றமளிக்கவில்லை என்றாலும் லாகிருக்கு 84 வது தாண்டிவிட்டது.   அவருக்கும் கூட “கிரஸன்ட் லொஜ் மாளிகையின் வயதை கணிக்க முடியவில்லை   150 வருடங்களுக்கு குறைவாக இருக்க நியாயம் இல்லை என்றார்.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரும் கூட இந்த புத்தளத்திலே  இப்படி  சகல வசதிகளுடன் கூடிய மாளிகை கட்டிக் குடியிருந்திருக்கிறார்கள்..  இப்போது  சற்று பழுதடைந்த  நிலை இருந்தாலும் கூட. புத்தளத்தாண்டா என்று கத்த வேண்டும் போல்இருந்தது.அந்தக் காலத்திலேயே நம்ம ஊர்க்காரர்கள் எவ்வளவு குசியாக இருந்திருக்கிறார்கள்.

mv-7

மாளிகயைின் முன் வராந்தையில்   ஏழு  மரத் தூண்கள் காணப்படுகின்றன.   பத்து பன்னிரெண்டு அடி உயரம் இருக்கலாம் என்பது எனது மதிப்பீடு.  ஒவ்வொறும் தனி மரங்கள்.   தனித் தனி மரங்களை வெட்டி எடுத்து  அவற்றைக் கடைந்தெடுத்து காலத்தால் வெல்ல முடியாது  தூண்களா ஆக்கி இருக்கிறார்கள்.இதே போன்ற மரங்கள் தான் சம்மாங் கோட்டுப்பள்ளியிலும் காணப்படுகின்றனவாம்.

“தூணில் மிகுந்ததாய் , துன் மாடங்கள் துய்ய நிறைந்ததாய்  அந்த காணி நிலத்திடையே ஒரு மாளிகை கட்டித் தர வேண்டும்……..” என்ற பாரதி பாடலை என் மனம் ‌‌அசைபோட்டுக் கொண்டது.  தூண்களும்தான், துன் மாடங்களும்தான் அந்த பழைய மாளிகைக்கு ஒரு வித  இனம் புரியாத  உணர்வுபூர்மான ஒரு தோற்றப்பட்டைத் தருகிறது.அதன் நீண்ட வராந்தாக்களில் ஹசீப் நடந்து சென்ற போது மறைந்த நிதியமைச்சரின் கம்பீரம் தெரிந்தது.

mv-8

“Dark Room”   இப்படி இந்த மாளிகையில்  ஒரு  அறை உள்ளது.   இது இந்த அறைக்கு அந்தக் காலத்தில் கொடுக்கப்பட்ட ‌பெயர். “டாக் ரூம் என்றதும்  அந்தக் காலத்தில் புகைப்பட  Film களை  Negative  உரு மாற்றும் இடம் என்று நினைத்துக் கொள்ள வேண்டம்.   இது  கொஞ்ஞம் வித்தியாசமானது.

இது பெருவளவுப் பெண்களின் பிள்ளைப் பேற்று அறை.  அந்தக் காலத்திலே  அதற்குக் கூட ஒரு தனி அறையை ஏற்பாடு செய்து இருந்திருக்கிறார்கள்.  அது பெரும்பாலும்  பாழடைந்த நிலையில் இருக்கிறது.   பாதியிருளாக இருந்த அந்த அறையினுள் நுழையும்போது ஒரு வித  திகில் உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

mv-10

எது சந்திரமுகி படத்தில் ஜோதிகா போவரே அதே மாதியான அறை. ” வேட்டைய மகாராஜா வந்து விடுவாரோ என்று வேறு பயம். அங்கிருந்த ஒரு இங்கு பெட்டியும் சேர்ந்தே பயமுறுத்தியது. சலங்கை இருந்திருந்தால் “ரா..ரா..சரசக்குராரா…சிந்தக்கு சீரா…என்று ஆடியிருக்கலாம் போன்ற ஒரு தோற்றம். அறைக்குள் இருக்கும் போது, ராஜாதி ராஜ..ராஜ கம்பீர..வேட்டைய மகராஜாவின் நினைவு வேறு வந்து தொலைத்தது.

அங்கு ஒரு பழைய பெட்டகம் ஒன்றும் இருந்தது. அது வெறுமையாக இருப்பதாகவும், அதனுள் இருந்த பல பொக்கிசங்கள் திருடப்பட்டு விட்டதாகவும் ஹஸீப் தெரிவித்தார்.என்ன இந்த அறை “சந்திரமுகி” படத்தில் வருவது போல உள்ளது என்று கேட்டபோது வாய் விட்டு சிரித்தார் ஹசீப்.

mv-11

நிறைய  நிறைய  எழுதலாம் , எழுதவும்தான் வேண்டும்.  ஆனால் “Time and Space “ பிரச்சினை இருப்பதால் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை எமக்கு.

இந்த வழக்கொழிந்து போன மௌலீதுக்கு  உங்களுக்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லையா என்ற போது, ஹசீப் நெய்னாமரைக்காருக்கு கோபம் வந்து விட்டது.” வரட்டுமே..யார் வேண்டுமானாலும் வரட்டும் பார்த்துக் கொள்கிறோம் “என்றார். இந்த இடத்தில் நெய்னா மரைக்கார் வீட்டு கெத்து நினைவுக்கு வந்தது.மழுப்பி விட்டு அடுத்த கேள்விக்கு போனோம்.

mv-12

முன்னால் நிதி அமைச்சரின் மகன் என்ற வகையில்  புத்தளத்து அரசியலலைப் பற்றி ஓரிரு வினாக்களை கேட்டுவைத்தோம்.

mv-13

K.A.B இன்  Home coming to S.L.M.C.  ஒரு வரலாற்றுத் தவறு என்று சொல்கிறார்.   இதன் மூலம் புத்தளம் ஒரு நகர பிதாவையும் இழக்க வேண்டிநிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார். முன்னாள் நகர பிதாவின் செல்வாக்கு நகரத்தில் வெகுவாகக் குறைந்துள்ளமை பற்றி இது கட்டியம் கூறுகிறது. தனிநபர் செயற்பாடுகள் காரணமாக சரிந்த செல்வாக்கை மீண்டும் கட்டி எழுப்புவது சிரமம் என்பது அவரது தனிப்பட்ட கருத்து.

mv-14

முன்னாள்  அமைச்சரராகவம், புத்தளத்தில் செல்வாக்குள்ள அரசியல் தலைவராகவும் இருந்த மர்ஹும் நயினா மரிக்கார்  அவர்களின் அடிச்சவட்டை பின்பற்றி அரசயிலில் நுழையும் எண்ணம் எதாவது உண்டா என்று வினவியபோது  அது இறைவனால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.   அதற்கான அத்திவாரம் பலமாக இடப்பட வேண்டும்.  அதற்கு தாம் இன்னும் தயாராக இல்லை என்கிறார்.  பிள்ளைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலம் ஆகியவைதான் தனது இப்போதைய கவலை என்கிறார்.

புத்தளம் மீடியாக்களான புத்தளம் ஒன்லைன், புத்தளம் டுடே என்பன சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்.

mv-15

உறவினகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே தொடர்ந்தும் அவரது பரபரப்பான சூழ்நிலையில் இருந்து அவரைத் தடுத்து வைக்க விரும்பமில்லைாமல் விடைபெற்றுக்  கொண்டோம்.

mv-16

  • எம்.எஸ். அப்பாஸ் ஷரீப்
  • ஏ.ன்.எம். பௌமி நெய்னாமரைக்கார்

One comment

Leave a Reply

Your email address will not be published.