Thahir interview : “வரும் உள்ளூராட்சி தேர்தலில் சு.க.சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என்பதை நானே தீர்மானிப்பேன்..!! தாஹிர் கூறுகிறார்

· · 944 Views

சுதந்திரக் கட்சியை புனர் நிர்மானம் செய்தல், அபிவிருத்திகளை மேற்கொள்ளல் உற்பட பல்வேறு பணிகளை தான் ஆற்ற இருப்பதாக அண்மையில் ஜனாதிபதியால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  புத்தளம்  அமைப்பாளர்களில் ஒருவராக (முஸ்லிம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கான ) நியமனம் செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாகிர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்து கட்சியின் உறுப்பினராக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள தான் தொடர்ந்தும் கட்சிக்காக அரும்பாடுபட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தான் கட்சிக்காக செய்த தியாகங்களை  அடையாளம் கண்டு தன்னை ஒரு அமைப்பாளராக்கிய ஜனாதிபதிக்கு நரிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

 

 

 

வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்தலில் புத்தளம் நகர சபை உற்பட  ஏனைய புத்தளம் தொகுதி பிரதேஷ சபைகளுக்கு  தான் கட்சிக்காரர்களின் ஆலோசனையுடன் சிறந்த வேட்பாளர்களை  போட்டியிட வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

கூடிய சீக்கிரம் புத்தளம் நகரில் சுதந்திரக் கட்சிக்கான அலுவலகம் ஒன்றை தான் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.