Special story : மகிந்தவின் எழுச்சிக்கு பெரும் ஒத்தாசை புரியும் இந்தியா..!! அவரின் கட்சிக்காரர்கள் ஜனாதிபதி பக்கம் சேராமலிருக்க பணத்தை வாரி இறைக்கிறது இந்தியா

· · 303 Views

பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து அரசியல் நகர்வுகளையும் இந்தியா பின்னால் இருந்து இயக்குவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

 

 

 

சீன நட்பினால் அதிருப்தி

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் நட்பு பாராட்டுவதால் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாகவும், இதனால் இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற தாமரை மொட்டு கட்சியை வளர்த்துவிட இந்தியா முயற்சித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

 

வீட்டிற்குச் சென்ற மகிந்த மீண்டும் அழைக்கப்பட்டார்

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கிவிட்டு மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். எனினும், மகிந்த ராஜபக்சவை மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் அரசியலில் வளரச் செய்ததன் பின்னணியில் இந்தியா இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த மே தினக் கூட்டம் உள்ளிட்ட மகிந்த ராஜபக்சவின் அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கான பணத்தையும் இந்தியா முதலீடு செய்வதாக கூறப்படுகிறது. இந்திய மத்திய அரசாங்கம் இதில் நேரடியாக தொடர்புபடாத போதிலும், பல்வேறு அமைப்புக்களின் ஊடாக இதற்கான பணத்தை இந்தியா விநியோகித்து வருகிறது.

 

 

 

 

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட 2017ஆம் ஆண்டு மே தினக் கூட்டத்திற்கான அனைத்து செலவுகளும் இந்தியாவின் இந்த அமைப்புக்கள் ஏற்றிருந்தன. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை. எனினும், இந்திய பணத்தின் மூலம் மக்கள் மத்தியில் எதிர்ப்பலையை உருவாக்குவதில் பசில் ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் வெற்றிகண்டுள்ளனர். இதுகுறித்து அரச புலனாய்வுப் பிரிவினரும், அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த செயற்பாடுகளில் இந்தியா தொடர்பு பட்டுள்ளதை எந்தவொரு தரப்பினரும் பகிரங்கமாக விமர்சிக்க விரும்பவில்லை. அவ்வாறு விமர்சிக்கும் பட்சடத்தில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதால் பகிரங்கமாக விமர்சிக்க அஞ்சுகின்றனர்.

 

 

 

 

எம்.பி பதவியைக்கூட பெற முடியாத பசில்
பசில் ராஜபக்ச, இந்தியாவுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்திருக்கும் நபராவார். கடந்த ராஜபக்ச ஆட்சியிலும் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு பசில் ராஜபக்சவே வழிவகுத்தார். இதற்கமைய இந்தியா இம்முறை தமது தேவையை நிறைவேற்றுவதற்காக பசிலை தேர்ந்தெடுத்துள்ளது.

 

 

 

 

 

பணப் பரிமாற்றம்
அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற தயாராகி வரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கவைத் தடுத்து நிறுத்துவதற்காக பசில் ராஜபக்ச அண்மையில் பலத்த முயற்சிகளில் ஈடுபட்டார். கட்சித் தாவ தயாராகி வரும் உறுப்பினர்களைக் கண்டறித்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து கட்சித் தாவலைத் தடுக்குமாறு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைக் கூட பசில் ராஜபக்ச விலைகொடுத்து வாங்க வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.