Special story : “நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கிச் சுட்ட பொலீசார்..!! கல்ஹின்னையில் என்ன நடந்தது,..? இன்று ஜும்மா தினமென்பதால் பதற்றத்தில் முஸ்லிம்கள்

· · 1686 Views

A.R.A.Fareel

  • சில மணி நேரம் பதற்றம்
  • பொலிஸ் அதிகாரி காயம்
  • மூவர் வைத்தியசாலையில்
  • ஐந்து பேர் நேற்று கைது

கண்டி மாவட்­டத்­திற்­குட்­பட்ட கல்­ஹின்­னையில் நேற்று முன்­தினம் இரவு இரு தரப்­பி­ன­ருக்­கி­டையில் இடம்­பெற்ற மோதல் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து காயங்­க­ளுக்­குள்­ளான நால்­வரில் மூவர் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

problem4

காய­ம­டைந்த போக்­கு­வ­ரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சையின் பின்பு வெளி­யே­றி­யுள்ளார்.

மோதல் சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சந்­தே­கத்தின் பேரில் ஐவரை அங்­கும்­புர பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

புதன்­கி­ழமை இரவு சுமார் 10 மணிக்கு ஆரம்­ப­மான மோதல் சம்­பவம் நள்­ளி­ரவு ஒரு மணி வரை நீடித்­துள்­ளது.

கல்­ஹின்­னையில் பொலிஸார் அசம்­பா­வி­தங்கள் மேலும் நிக­ழா­தி­ருக்க கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் நடந்த தினம் இரவு நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்­காக அங்­கும்­புர பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக கட்­டு­கஸ்­தோட்டை அல­வத்­து­கொட பொலி­ஸாரும் நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்­காக ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்­டனர்.

இச்­சம்­பவம் தொடர்­பாக தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, புதன்­கி­ழமை  இரவு 10 மணி­ய­ளவில் கல்­ஹின்னை சந்­தி­யி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றுக்கு மது­போ­தையில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­தவர் இருவர் வருகை தந்­துள்­ளனர்.

பேக்­க­ரிக்கு வந்­த­வர்கள் சிகரட் கேட்­டுள்­ளார்கள். சிகரட் விற்­பனை செய்­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முஸ்­லிம்­க­ளுக்கு தவ­றான வார்த்­தை­களைப் பிர­யோ­கித்து விட்டு வெளி­யி­றங்­கி­யுள்­ளனர்.

பின்பு வெளியில் இருந்த முஸ்லிம் வயோ­தி­பரின் தொப்­பியை கழற்றி எடுத்­துள்­ள­துடன் அவ­ரது தாடி­யையும் பிடித்து இழுத்­துள்­ளனர். இதன் பின்பே முறுகல் நிலை ஆரம்­பித்­துள்­ளது. முஸ்­லிம்கள் சம்­ப­வத்தை அறிந்து அங்கு குழு­மி­யுள்­ளனர்.

தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் திரும்பிச் சென்று முச்­சக்­கர வண்­டி­யிலும் மோட்டார் சைக்­கி­ளிலும் ஆட்­களை கூட்­டி­வந்­துள்­ளனர்.

போக்­கு­வ­ரத்து ரோந்துச் சேவையில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸாரும் ஏனைய பொலி­ஸாரும் மோதல் நிலை உரு­வா­காமல் தடுப்­ப­தற்கு முயற்­சித்­துள்­ளனர்.

ஸ்தலத்­துக்கு வருகை தந்த பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பினர் உவைஸ் ரசான் இரு தரப்­பி­ன­ரையும் சமா­தா­னப்­ப­டுத்தும் முயற்­சியில் ஈடு­பட்ட போது பெரும்­பான்மை இனத்­தவர் அவரைத் தாக்­கி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்தே மோதல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. நிலை­மையைச் சமா­ளிக்க ஏனைய பொலிஸ் நிலை­யங்­க­ளி­லி­ருந்தும் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மூவரும் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். சம்­ப­வத்தை கேள்­வி­யுற்ற மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார் ஆகியோர் உடனே ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்­டனர்.

மோதலில் ஈடு­பட்ட பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ‘இது எமது நாடு பௌத்த நாடு, நீங்கள் மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­ப­வர்கள் இதனை அனு­ம­திக்க முடி­யாது’. என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

மோதல்கள் தீவி­ர­ம­டை­யா­தி­ருப்­ப­தற்­காக வானத்தை நோக்கி பொலிஸார் துப்­பாக்கிப் பிர­யோ­கமும் மேற்­கொண்­டனர்.

கல்­ஹின்­னைக்கு மேலும் சில தினங்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கு­மாறு மத்­திய மாகாண சபை உறுப்­பினர் லாபீர் ஹாஜியார் பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்­மானும் எஸ்.எம்.மரிக்­காரும் பொலிஸ்மா அதி­பரைத் தொடர்பு கொண்டு கல்­ஹின்­னைக்கு பாது­காப்பு வழங்­கு­மாறும் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்தும் படியும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

‘கல்­ஹின்னை மக்கள் அமைதி காக்கும் படியும் பொறு­மையை கடைப்­பி­டிக்கும் படியும் கல்ஹின்னை உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எம்.சக்கி மொஹமட் (ரப்பானி) வேண்டியுள்ளார்.

கல்ஹின்னையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லையெனவும் அக்கும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று ஜும் ஆ தொழுகை தினமாகையால் கல்ஹின்னை பிரதேசத்துக்கு மேலதிக பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.