Special news : வித்யாவுக்காக கண்ணீர் விட்டவர்கள் 18 முஸ்லிம் அநாதை சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை ஏன் கண்டு கொள்ளவில்லை..? பணம் பத்தும் செய்கிறது

· · 540 Views

Hyder Ali's Profile Photo By : U.H. Hyder Ali 

 

இரும்புக்கரம் கொண்டு உண்மையை மறைக்க முட்படும் ஒரு சமூகத்ற்கு மத்தியில் 18 அனாதை சிறுவர்களுக்கும் நீதி கிடைக்குமா ?

 

 

 

கண் வைத்தியர் மரீனா தாஹா ரிபாய் அவர்களின் தலைமையில் அவரது வயிற்றுப்பிழைப்புக்காக நடாத்தப்படும் அல் முஸ்லிமாத் என்கின்ற அரசார்பற்ற அமைப்பினால் முஸ்லீம் சமூகத்துக்கு இழைக்பட்ட ஏராளமான அநீதிகளுள் ஒன்றுதான் .

 

 

அல் முஸ்லிமாத் அமைப்பின் கிளை நிறுவனமான தருன் நுஸ்ரா அனாதை இல்லத்தில் 18 குழந்தைகளது துஷ்பிரயோக சம்பவம் . இந்த 18 அனாதை சிறுவர்கள் மீது மேட்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக சம்பவதை எந்த ஒருவகையிலும் சரிகாணவோ நியாயப்படுத்தவோ முடியாது.

 

 

 

இருந்தும் இந்த சிறுவரதுஷ் பிரயோகத்துக்கு உறுதுனையாக இருந்த இந்த கண் வைத்தியர் மரீனா ரிபாய் தொடர்ந்தும் துஸ்பிரயோகத்தில் நேரடியாக தொடர்புபட்டவர்களை காப்பாற்றும் முயட்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

 

தங்களைத்தானே முஸ்லீம் சமூகத்தின் ஏகபோக பிரதிநிதிகளாக கூறிக்கொள்ளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் தேசிய சுறா சபை இந்த சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் தொடர்ந்தும் மௌனம் காக்கின்றனர்.

 

 

 

அரேபிய ரியல்களால் வயிறு பிழைக்கும் முஸ்லீம் அரசசார்பற்ற அமைப்புக்களும் ஜமாத்துக்களும் டாக்டர் மரினாவின் சிறுவர் துஷ் பிரயோகதுக்கு துணை நிட்கின்றர்கள்.

 

 

 

முஸ்லீம் சமூகம் சார்ந்த அச்சு மற்றும் இணையதள ஊடகங்கள், இந்த செய்தியை மூடி மறைக்கின்றனர்.

 

 

 

 

வித்தியாவுக்காக முதலைக்கண்ணீர் விட்ட முஸ்லீம் எழுத்தாளர்கள்,கவிதை எழுதிய கவிஞர்கள் இந்த 18 முஸ்லீம் அனாதை சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை .

 

 

 

இலங்கை வரலாற்றில் சிறுவர் துஷ்பிரயோக மற்றும் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தி மிக விரைவில் தீர்ப்பு வழங்கிய சம்பவம் என்றால் அது வித்யாவின் சம்பவம் தான்.

 

 

 

 

வித்யாவுக்காக பாராளுமன்றத்தில் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன மதம் பாகுபாடு இன்றி குரல் கொடுத்தார்கள் , சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக கடமையாற்றுகின்ற பல சர்வதேச அமைப்புக்கள் துணை புரிந்தன Save the children, UNICEF, Plan International, Canadian Red Cross , அதே போல் மனித உரிமை அமைப்புக்கள் செயட்பாட்டாளர்கள் இந்த விடயத்தில் களம் இறங்கி செயட்பட்டார்கள் , உள்நாட்டு மட்டும் சர்வதேச செய்திகள் வித்தியாவுக்காக முன்னுரிமை வழங்கினார்கள் .

 

 

 

 

ஆனால் 21 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த 18 சிறுவர்களின் விடயத்தில் அமைதிகாக்கின்றார்கள் , முஜீபுர்ஹ்மான், றிஷாட் பதியுதீன் , ரவூப் ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளை தூண்டி பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று இந்த அனாதை சிறுவர்கள் விடயத்தில் பொடுபோக்காக இருக்கின்றார்கள் கண்டும் காணாது இருக்கின்றர்கள் .

 

 

 

 

இலங்கையில் முஸ்லீம் மத குருக்கள் அமைப்பினதும் இயக்கம் வளர்க்கும் இயக்கவாதிகளினதும் இரும்பு பிடிக்குள் சிக்கித்தவிக்கும் முஸ்லீம் சமூகம் தனது சமூகத்தில் இடம்பெறும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் சவுதி அரேபிய, ஈரான், துருக்கி போன்று மதத்தின் பெயரால் அநீதிகளை மூடி மறைக்கவே முட்படுகின்றது.

 

 

 

 

முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டே வருகின்றது , அரபு மதரஸாக்களில் இடம்பெறும் ஓரின சேர்க்கை சிறுவர் துஷ் பிரயோகங்கள் ஒருசில வெளிவந்தாலும் அனேகமானவைகள் மூடி மறைக்கப்பட்டு இருக்கின்றது பெண்கள் மதரசாக்களிக்களில் இந்த சிறுவர் பாலியல் தொல்லைகள் காரணமாக எத்தனையோ மாணவிகள் தாற்கொலை முயற்சிகளும் ஈடுபட்டு இருக்கின்றார்கள் , தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

 

 

 

 

இந்த இரும்புக் கரங்களையும் தண்டி ஒருசில எமது இளைஞர்கள் முகநூளில் இந்த 18 சிறுமிகளுக்காக ஒரு புரட்சியை மேட்கொள்கிறார்கள் அவர்களது நோக்கம் இந்த சிறுவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே அவர்களுடைய அந்த நோக்கம் வெற்றி பெற பிரார்த்திப்போம்.

 

 

 

 

ஒரே ஒரு ஆங்கில நாள் இதழ் ஒன்று மட்டும் இந்த சிறுவர் துஷ்பிரயோகா சம்பவம் சம்பந்தமாக விசாரணைகளை மேட்கொண்டுவரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் தலைமை அதிகாரி Marini De Livera. அவர்களுடைய செவ்வியை பிரசுரித்து இருந்தார்கள்.

 

 

 

http://www.dailynews.lk/2017/11/15/features/134492/teenage-orphans-report-violations-darun-nusra

இந்த 18 அனாதை சிறுவர்களின் வழக்கு எதிர்வரும் 7ம் திகதி டிசம்பர் 2017 கொழும்பு மாவட்ட கங்கொடவில நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்றது .

 

 

 

 

மனிதாபிமானத்தையும் தண்டி மதம் என்கின்ற இரும்புக்கரம் கொண்டு உண்மையை மறைக்க முட்படும் ஒரு சமூகத்ற்கு மத்தியில் இந்த 18 அனாதை சிறுவர்களுக்கும் நீதி கிடைக்குமா ?

Leave a Reply

Your email address will not be published.