Special news :”முசலி பிர­தேச செய­லக எல்­லைக்குள் 2800 ஏக்கர் காணி கசெட் பண்ணப்பட்டுள்ளது..!!முஸ்லிம்களுக்கு எதிரான குற்றத்தில் நல்லாட்சி

· · 608 Views

A.R.A.Fareel

முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள்

 

 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன­வாத அமைப்­பு­க­ளி­னதும் சூழ­லி­யல்­வா­தி­க­ளி­னதும் தவ­றான வழி நடத்­தல்­க­ளி­னா­லேயே வில்­பத்து வனப்­பி­ர­தேச எல்­லையை விஸ்­த­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

 

 

nilaipadu1

அதனால் ஜனா­தி­பதி வில்­பத்து மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்­ள­வர்­க­ளையும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றங்­களை எதிர்க்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்துக் கொண்டு வில்­பத்து பிர­தே­சத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு உண்­மை­யான கள­நி­லை­யினை அறிந்து அறிக்கை விட­வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்ட கூட்­டத்தில் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்­பாட்டில் நேற்றுக் காலை கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள ரேணுகா ஹோட்­டலில் நடை­பெற்ற ஊடக சந்திப்பின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் ஜனா­தி­ப­தியை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்­தித்து கோரிக்கை விடுப்­ப­தெ­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொள்­வ­தெ­னவும்அறிவிக்­கப்­பட்­டது.

மஹிந்த ராஜ­பக்­­ஷவின் அணியைச் சேர்ந்த இணைந்த எதிர்க்­கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார, டளஸ் அல­க­பெ­ரும, உத­ய­கம்­மன்­பில போன்­ற­வர்கள் வில்­பத்து விவ­கா­ரத்தை இன­வா­தத்­துடன் நோக்கி நாட்டில் சிங்­கள முஸ்லிம் கல­வ­ர­மொன்­றினை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் தான் இதன் பின்­ன­ணி­யி­லி­ருந்து செயற்­ப­டு­கி­றார்கள்.

கடந்த காலங்­க­ளிலும் நாட்டில் சிங்­கள முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்­தனர். ஆனால் முடி­யாமற் போனது. இன்று வில்­பத்து விவ­கா­ரத்தில் இவர்­களே டீசல் ஊற்றி தீயிட முயற்­சிக்­கி­றார்கள் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன்
கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கையில்;

வில்­பத்து விவ­கா­ரத்தை சிங்­கள ஊட­கங்கள் திரி­பு­ப­டுத்தி செய்தி வெளி­யி­டு­கின்­றன. தெற்­கி­லுள்ள மக்கள் இது விட­யத்தில் தவ­றாக வழி நடத்­தப்­ப­டு­கி­றார்கள்.

வில்­பத்­துவில் காடுகள் அழிக்­கப்­பட்டு மீள் குடி­யேற்­றங்கள் இடம் பெறு­வ­தா­கவும் இதனை முஸ்லிம் அர­சியல் தலை­வரே முன்­னின்று நடத்­து­வ­தா­கவும் செய்­திகள் வெளி­யி­டு­கின்­றன. இந்­நாட்டில் சிங்­கள, முஸ்லிம் சமூகம் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற நோக்­கு­டனே நாம் செயற்­ப­டு­கிறோம். இன நல்­லி­ணக்­கத்தை சிதைத்து முறுகல் நிலையைத் தோற்­று­விக்க பல­த­ரப்­புகள் முன்­வந்­துள்­ளன.

முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் 2012 இல் இர­க­சி­ய­மாக வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­தினால் வில்­பத்து வன­பி­ர­தே­சத்­துக்கு சொந்­த­மா­ன­தென அர­சாங்க வர்த்­த­மானி வெளி­யிட்­டப்­பட்­டது.

இந்த வர்த்­த­மானி 2015 இல் வெளி­வந்­தது. வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்ட காலத்தில் அக்­கா­ணிகள் காடு­க­ளா­கவே இருந்­தன. யுத்­தத்­தினால் வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளது காணிகள் அவை. 25 வரு­ட­கா­ல­மாக மக்கள் அங்கு வாழா­ததால் காடு­க­ளாக மாறி­யி­ருந்­தன.

முசலி பிர­தேச செய­லக எல்­லைக்குள் 2800 ஏக்கர் காணி கசெட் பண்­ணப்­பட்­டது. இக்­கா­ணியில் 208 ஏக்கர் மாத்­தி­ரமே மக்கள் பாவ­னைக்­காக விடு­விக்­கப்­பட்­டது. இக்­காணி மக்­களின் பூர்­வீகக் காணி. வில்­பத்து வன பிர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­பட்டால் மக்கள் இக்­கா­ணி­களை இழக்கும் நிலை ஏற்­ப­டலாம். இதனால் நீதி­மன்­றுக்கு சென்று மக்­களின் காணி­களை அவர்­க­ளுக்கு பெற்றுக் கொடுப்போம்.

வில்­பத்து முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை வட­மா­காண சபை முதல்­வரோ வட­மா­காண சபை உறுப்­பி­னர்­களோ எதிர்க்­க­வில்லை. எதிர்த்துப் பேச­வில்லை. தெற்கில் உள்ள அர­சி­யல்­வா­தி­களே வில்­பத்து பிர­தேச முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை எதிர்க்­கி­றார்கள். பொய்ப் பிர­சா­ரங்­களைச் செய்­கி­றார்கள் என்றார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இங்கு உரை­யாற்­றினார். அவர் உரை­யாற்­று­கையில் ‘வில்­பத்து விவ­கா­ரத்தை சில இன­வாத அமைப்­பு­களும் சூழ­லி­ய­லா­ளர்­களும் தேசிய பிரச்­சி­னை­யாக்­கி­யுள்­ளனர். மக்­க­ளுக்கு இது பற்றி தவ­றான கருத்­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தெற்கில் தவ­றான கருத்து பரப்­பப்­ப­டு­கி­றது.

கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­தி­லி­ருந்து இப்­பி­ரச்­சினை தொடர்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்கம் இதற்கு நிரந்­தர தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். முறைப்­பா­டு­களை விசா­ரித்து தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­டா­விட்டால் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்றம் தொடர்பில் சந்­தேகம் மேலும் வரலாம்.

1990 ஆம் ஆண்டில் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களால் வடக்­கி­லி­ருந்து விரட்டப்­பட்­டனர். அவர்கள் புத்­தளம், குரு­நாகல், கொழும்பு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு வந்து மீள்­கு­டி­யே­றினர். 2009 ஆம் ஆண்டு வரை புத்­தள மாவட்­டத்தில் மாத்­திரம் 40 ஆயிரம் முஸ்­லிம்கள் குடி­யே­றி­யி­ருந்­தனர்.

விளச்­சி­குளம் பகு­தி­யி­லேயே காட­ழிப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக கூறு­கி­றார்கள். இது மரு­த­மடு கிராம சேவை­யாளர் பிரி­வுக்­குட்­பட்­ட­தாகும். 1990 இல் புலி­களால் முஸ்­லிம்கள் விரட்­டப்­படும் போது இப்­ப­கு­தியில் 1800 குடும்­பங்கள் இருந்­தன. இப்­ப­கு­தியே 2012 இல் வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­துக்கு சொந்­த­மா­ன­தென வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது.

தமது பூர்­வீகக் காணியில் குடி­யே­றிய மக்­களை சூழ­லி­ய­லா­ளர்கள் நில ஆக்­கி­ர­மிப்பு என்­கி­றார்கள். இவர்கள் ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், மலே­சிய மக்கள் அல்ல. இலங்­கை­யர்­களே. கள்ளத் தோணிகள் அல்லர். இதன் பின்­ன­ணியில் அர­சியல் இருக்­கி­றது. இன நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. உண்­மையில் வில்­பத்து வனப் பிர­தேசம் அழிக்­கப்­பட்­டி­ருந்தால் குற்­ற­வா­ளி­களைத் தண்­டிக்க வேண்டும்.

முஸ்­லிம்கள் பிரி­வி­னை­வா­தத்தை எதிர்த்­தார்கள். வட பகுதி மக்கள் பிரி­வி­னை­வா­தத்தை எதிர்த்­த­தனா­லேயே அங்­கி­ருந்து விரட்­டப்­பட்டு இப்­போது துன்பப்படுகிறார்கள்.

இல்லையேல் இன்றும் தங்களது சொந்தக் காணிகளில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்றார்.

இவ்வூடக சந்திப்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், இஷாக், நவவி ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் உலமாசபை, தேசிய சூரா சபை பிரதிநிதிகளும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்சாத் நிசாமுதீன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.