Special news :”பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்..!!எதிர்ப்பாராவிதமாக பிரதமர் காட்டம் – Full story

· · 1493 Views

– ஏ.எல்.எம்.சத்தார், எம்.ஏ.எம்.ஹஸனார் –

railllll1

பெளத்த லேபல்களை ஒட்டிக்கொண்டு பெளத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்கிறார் பிரதமர்

இந்த நாட்டில் சட்­டத்­தையும் சமா­தா­னத்­தையும் நிலை நாட்ட பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­வ­தற்கு எல்லா வழி­க­ளிலும் நாம் நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

சிறு கூட்­டத்­தினர் வேண்­டத்­த­காத செயற்­பா­டு­களால் சட்­டத்தை சிதைக்க முய­லு­வதை நாம் அனு­ம­திக்­க­மாட்டோம்.

நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் மத ஒரு­மைப்­பாட்­டையும் உரு­வாக்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் தலை­மை
யில் சமய செயற்­பா­டு­க­ளுக்­காக வெவ்­வேறு அமைச்­சுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளன என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறினார்.

பதுளை மாவட்­டத்தின் வெலி­மடை குருத்­த­லா­வயில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற தேசிய மீலாத் விழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் கூறி­ய­தா­வது, முஹம்­மது நபி­களார் பிறக்­கும்­போது அப்­பி­ர­தேசம் எங்கும் மூடக்­கொள்­கை­களே காணப்­பட்­டன.

அது இந்­தியா, பார­சீகம், வரையும் பரவி இருந்­தது. இந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே முஹம்­மது நபி­ய­வர்கள் இஸ்லாம் சம­யத்தைப் போதித்து மக்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்­தி­னார்கள்

இந்து, பௌத்தம், வைணவம் ஆகிய மதங்கள் ஆசி­யா­விலும் கிறிஸ்­தவ மதம் ஐரோப்­பா­விலும் பரவி வந்­தன. அந்த சந்­தர்ப்­பத்தில் மத்­திய கிழக்கு நாடு­க­ளிலே மூடக் கொள்­கை­யோடு மக்கள் அநா­க­ரிக வாழ்க்­கையே வாழ்ந்து கொண்­டி­ருந்­தார்கள். இத்­த­கைய கால­கட்­டத்­தி­லேதான் முஹம்­மது நபி பிறந்து மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தி­னார்கள்.

அல்­குர்ஆன் மூலமே இஸ்லாம் உல­கத்தில் அறி­மு­க­மா­கி­யது. இன்று பிலிப்பைன்ஸ், அமெ­ரிக்கா வரை­யிலும் இஸ்லாம் வியா­பித்­தி­ருக்­கி­றது.

பௌத்த, இந்து, கிறிஸ்­தவ சம­யங்­களைப் போன்றே இஸ்­லாமும் உலகில் மிகவும் பிர­தான மத­மாக விளங்­கு­கின்­றது. ஏனைய மதங்­களைப் போன்று இஸ்­லாமும் இன்று ஒரு சிலரால் தவ­றாகப் புரிந்து கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

இதனால் அடிப்­ப­டை­வா­திகள் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இது முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்­ளேயும் வெளி­யேயும் பாதிப்­புக்­களை விளை­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

எந்த சம­யத்­திலும் சரி, தவ­றான அர்த்­தங்கள் கொள்­ளப்­ப­டும்­போது அங்கு சிக்­கல்கள் தோன்­று­வது தவிர்க்க முடி­யாது போகி­றது.

இன்று இஸ்லாம் சம­யத்தில் எழுந்­துள்ள இத்­த­கைய சிக்­கல்­களைத் தீர்த்து வைப்­ப­தற்­காக இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இன்று இஸ்­லாத்­துக்கு எதி­ராக ஐரோப்­பிய நாடுகள் பாரிய எதிர்ப்பு நட­வ­டிக்­கை­யொன்றைத் தொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. நபிகள் நாய­கத்தால் போதிக்­கப்­பட்ட இஸ்லாம் மார்க்­கத்தில் எத்­த­கைய தவ­று­களும் இல்லை. இதே­போன்று எந்த சம­ய­மா­னாலும் சரி அது தவ­றாக அர்த்தம் கொள்­ளப்­பட்டால் அது சம­யத்­தி­லுள்ள பிழை­யல்ல.

அதனை அர்த்­தப்­ப­டுத்திக் கொண்­ட­தி­லுள்ள தவறே அதற்­குக்­கா­ர­ண­மாகும். இதனால் குறித்த மதத்­துக்கு விரோ­த­மாகச் செயற்­ப­டு­வதில் அர்த்­த­மில்லை.

இதனால் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு விரும்­பி­ய­வாறு செயற்­ப­ட­வி­டாமல் மதத்தின் உண்­மை­யான ரூபத்தை மக்கள் முன்­வைப்­பது மதத் தலை­வர்கள் மீதுள்ள பாரிய பொறுப்­பாகும்.

விசே­ட­மாக இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள், மத போத­கர்கள் இஸ்­லாத்தின் உண்­மை­யான கருத்­து­களை நிலை நாட்டும் பாரிய கட­மையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இது பகி­ரங்­க­மாகத் தெரி­யா­விட்­டாலும் இவர்­க­ளது முயற்­சிகள் குறித்து நான் நன்கு அறிவேன். இதனால் பொறுப்பு வாய்ந்த அர­சாங்கம் என்ற வகையில் உங்கள் அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்கக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன்.

மதத்­துக்குள் தலை­தூக்கும் அடிப்­ப­டை­வா­தத்தை அந்த மதத்­துக்குள் இருந்தே கட்­டுப்­ப­டுத்த முடியும். இது இஸ்­லாத்­துக்கு மட்­டு­மல்ல ஏனைய மதங்­க­ளுக்கும் பொருந்­து­வ­தாகும். இந்­தி­யாவில் இந்து மதத்­துக்கும் ஏனைய மதங்­க­ளுக்கும் இடையே உள்ள அடிப்­ப­டை­வா­தி­களால் உரு­வான அசம்­பா­வி­தங்கள் குறித்து நாம் அறிவோம்.

ஆனால் அத்­த­கைய நிலை­யொன்று இங்கு ஏற்­பட அனு­ம­திக்­க­மாட்டோம்.

இன, மத, குலம் என்ற பெயரில் அடிப்­ப­டை­வாதம் தலை தூக்­கு­மானால் அந்­தந்த சமூ­கங்­க­ளா­லேயே அதனைக் கட்­டுப்­ப­டுத்திக் கொள்­வதே தீர்­வாகும். அடிப்­ப­டை­வாதம் அனைத்துத் தரப்­புக்கும் பாதிப்­பா­கவே அமையும். சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் அடிப்­படை வாதம் உரு­வானால் அதனை சிங்­கள பௌத்­தர்­க­ளா­கிய நாமே கட்­டுப்­பாட்டுக்குள் கொண்­டு­வர வேண்டும்.

புத்த பெரு­மானும் கூட எல்லா மதங்­க­ளுக்கும் செவி­சாய்க்கும் படியே எப்­போதும் போதனை செய்தார். தேவை­யேற்­ப­டும்­போது அவர்­க­ளுடன் தர்க்கம் புரி­யு­மாறும் உப­தே­சித்­துள்ளார். புத்த பெரு­மானார் ஏனைய மதத் தலை­வர்­க­ளு­டனும் தர்க்கம் புரிந்­துள்ளார். ஆனால் கொலை செய்­யவோ, மோச­மான வார்த்­தை­களால் பேசவோ, அடுத்­த­வர்­க­ளுடன் தாக்­குதல் நடத்­தவோ, பிற மதத்­தினர் வாழும் இடங்­களை நாசப்­ப­டுத்­தவோ, அவர் செயற்படவில்லை.

பௌத்த லேபல்­களை ஒட்­டிக்­கொண்டு பௌத்த விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டக்­கூ­டாது. பெரும்­பான்மை சிங்க ள மக்­களின் பாது­காப்பு சகல இன மக்கள் மத்­தி­யிலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தி­லேயே தான் தங்­கி­யி­ருக்­கி­றது. நாம் அனை­வரும் இலங்­கையர் என்ற மனப்­பான்­மையை வளர்த்­துக்­கொள்ள வேண்டும். இந் நாட்­டி­லுள்ள 22 மில்­லியன் மக்­களும் எந்­த­மத இனங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­னாலும் எல்­லோரும் இலங்­கை­ய­ரா­வார்கள்.

இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் மதத்தைப் பின்­பற்­று­வோ­ரி­டையே பீதி நிலை ஒன்று நில­வி­யது. அத்­த­கைய நிலை­யொன்று மீண்டும் உரு­வா­கப்­போ­கி­றதா? என்ற ஐயம் இன்று ஒரு சிலர் மத்­தியில் எழுந்­துள்­ளது. முஸ்லிம் கிரா­மங்­களில் ஒரு சில பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன. கிறிஸ்­தவ, இந்து வழி­பாட்­டி­டங்­களில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டன. ஒரு சிலர் நினைக்­கி­றார்கள் பௌத்த மதத்­திற்கு எத்­த­கைய பிரச்­சி­னை­களும் இல்லை என்று. ஆனால் புத்த சம­யத்­துக்கும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருப்­பதை நான் இந்த இடத்­தி­லேயே கூறிக் கொள்ள விரும்­பு­கிறேன்.

அர­சாங்­கத்தின் விருப்பு வெறுப்­புக்­கி­ணங்க செயற்­ப­டாது விட்டால் மல்­வத்த மத பீடத்தை இரண்­டாக உடைப்­ப­தாக அன்று மல்­வத்த மகா­நா­யக்க தேர­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. இது கடந்த கால கசப்­பான நிகழ்வு.

ஆனால் மேற்­கண்­ட­வா­றான அச்­சு­றுத்­தல்கள் மீண்டும் தலை­தூக்­குமோ என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. அன்று மல்­வத்த மகா­நா­யக்க தேர­ருக்கு செவி­ம­டுக்­கா­த­வர்­க­ளா­லேயே இன்று அடிப்­ப­டை­வாதம் பரப்­பப்­ப­டு­கி­றது. இந்த செயற்­பாட்டை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது. கடந்த வருடம் நாம் அனை­வரும் ஒன்று சேர்ந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­தமை இந்த அச்­சு­றுத்தல் பய­மு­றுத்தல் கலா­சா­ரத்­துக்கு முடி­வு­கட்­டு­வ­தற்கே. எனவே இவை மீண்டும் தலை­தூக்­காது நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வாக செயற்­ப­டுவோம்.

வானொலி, தொலைக்­காட்சி, அச்சு ஊட­கங்­களின் மூலம் அடிப்­ப­டை­வாதம் பரப்­பப்­ப­டு­வதை நட­வ­டிக்­கைகள் மூலம் கட்­டுப்­ப­டுத்த முடி­யு­மா­ன­போதும் சமூக ஊட­கங்கள், இணையத் தளங்கள் மூலம் வெளி­யிடும் விட­யங்­களை கட்­டுப்­ப­டுத்தும் வாய்ப்பு இல்லை. சமூக ஊட­கங்­களால் எத­னையும் வெளி­யிடும் வாய்ப்பு உள்­ளது. இத­னூ­டா­கவே அடிப்­ப­டை­வாதம் பர­வு­கி­றது. இது தொடர்­பான அனைத்துத் தரப்­பி­ன­ரையும் அழைத்து கலந்­து­ரை­யாட ஜனா­தி­பதி முயற்சி செய்து கொண்­டி­ருக்­கிறார். இது சாத்­தி­யப்­ப­டாது போனால் நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்கும் நாட்­டுக்கும் அச்­சு­றுத்­த­லா­கவே அமையும். அதனால் சட்ட ரீதி­யாக தீர்­வு­காண முய­லு­வதே இதற்­கான வழி­யாகும்.

எவ்­வா­றான  போதிலும் 2015 ஜன­வரி 8 ஆம் திக­திக்கு முன்­னி­ருந்த நிலைக்கு நாடு தள்­ளப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என்­பதை உறு­தி­யாகக் கூறு­கிறேன். நாட்டை அமைதி– சமா­தா­னத்தின் பால் அழைத்துச் செல்வதே எமது தேவையாகும்.

இந்த நாட்டில் சட்டத்தையும் சமாதானத்தையும் நிலை நாட்ட பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்வதற்கு எல்லா வழிகளிலும் நாம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். சிறு கூட்டத்தினர் வேண்டத்தகாத செயற்பாடுகளால் சட்டத்தை சிதைக்க முயலுவதை நாம் அனுமதிக்கமாட்டோம். நாட்டின் நல்லிணக்கத்தையும் மத ஒருமைப்பாட்டையும் உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவின் தலைமையில் சமய செயற்பாடுகளுக்காக வெவ்வேறு அமைச்சுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய கல்விக்கு பாதிப்பாக அமைந்த மௌலவி ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படுவதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 2017 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமிக்கப்படுவதற்கான ஆலோசனையை கல்வி அமைச்சருக்கு வழங்கியிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் மதங்களைப் பின்பற்றும் உரிமையை எமது அரசு வழங்கியிருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.