Special news: புத்தளம் முஸ்லிம் காங்கிரஸின் 5 கோடி கடற்கரைப் பூங்காவிற்கான அனுமதியை வழங்கியது மாவட்ட அபிவிருத்தி சபை..!! நியாஸ் M.P.C. பிரேரணை சமர்ப்பித்தார்

· · 1991 Views

ஐந்து கோடி ரூபா  கொழும்பு முகதல் திடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு ‌நேற்றுத்தான் மாவட்ட அபிவிருத்தி சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான  பிரேரணையை  2016.09.13 ஆந் தேதிய நடந்த புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக  வடமேல் மாகாண சபை உறப்பினர் எஸ்எச். நியாஸ்  இன்று “புத்தளம்டுடேக்கு” த் தெரிவித்தார்.

park-2

கொழும்பு முகத் திடல் இப்போது முடிவடையும் இடத்திலிருந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் வரையிலான பகுதி வரையில்  நீடிப்புச் செய்வதற்காக   நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற முறையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் தலைவரால்  5 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

ஆயினும் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஆரம்ப கட்ட பணி  மேற்‌ கொள்ளப்படவில்லை. அந்த அரம்ப கட்ட பணிதான் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வது.  இது  நடை பெற்றுள்ளது.  இதைத்  தொடர்ந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1463187_326720617470528_1852714571_n

அடுத்த மூன்று மாதங்களுக்குள் குறைந்த பட்சம் திட்டம் தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது  எனக் குறிப்பிட்ட  மாகாண சபை உறப்பினர் நியாஸ்  புத்தளம் வாவியின் இந்தப் பக்க கரையோரமாக நடை‌ பெற உள்ள  கடற்கரை அபிவிருத்திக்கு  சமாந்தரமாக  ஏரியின் அடுத்த கரையிலும் கடலோர தாவர வியற் பூங்கா ஒன்றை அமைப்பதற்கான  நடவடிக்கைக்கும் இன்ற அங்கிகாரம் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

இது புத்தளம் எரியின் அடுத்த பக்கத்தில் உள்ள உசிலன் குடாவில் மேற் கொள்ளப்பட உள்ளது எனத்  தெரிவித்த மாகாண சபை உறப்பினர் நியாஸ் அத்திட்டதின் பொருட்டு ஆரம்ப கட்டமாக 30 மில்லியன்கள் செலவிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.  கண்டக் குடா. பள்ளிவாசல் துறை உள்ளிட்ட 04 கிராம சேவையாளர் பிரிவுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகவும். அவர்களுகளுக்கு  உரிய பொழுது போக்கு வசதிகள் ஏதும் இல்லை  எனவும் குறிப்பிட்டார்.

image_00004

இந்த மக்கள் கடலோரம் வாழ்ந்தாலும் அந்தக் கடற்கரைப் பிரதேசம் கடற்படை பயிற்சிப் பிரதேசமாக இருப்பதால்  பிரதேச மக்களால் அதை அண்டவும் முடியாத நிலை நிலவுகிறது.. எனவே அதற்கு மாற்றீடாக கண்டல் உட்பட இதர கடற் பிரதேச தாவரங்களைக் கொண்ட  தாவர வியற் பூங்காவாக அது அமையும் எனவும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறு இருக்க  புத்தளம் மக்கள் அனுபவித்து வந்த ”பெலூன் பஸ் சேவை சடுதியாக நிறுத்தப்பட்டது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி சபையில் பேசப்பட்டதா என வினவியபோத  அது பற்றி சபையில் ஏதும் பேசப்படவில்லை எனத் தெரிவித்த  மாகாண சபை உறுப்பினர் நியாஸ்  அவிடயம்  தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் உடனேயே தொடர்பு கொள்வதாகத் தெரிவித்தார்.

 

2 comments

  1. கடற்கரை அபிவிருத்தி விடயம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதன் முக்கிய அம்சம் அபிவிருத்திக்குப்பின்னான “பராமரிப்பு” வேலை. எந்த ஒரு பெளதீக அம்சங்களும் சரியான பராமரிப்பு இல்லாத பட்சத்தில் பாழடைந்து அழிந்து போவது நிச்சயம். ஆகவே இதற்கு தேவையான பயிற்சியும் நிரந்தர பண ஒதுட்கீடும் மிக மிக அவசியமாகும். இப்போது உள்ள கொழுப்பு முகத்திடலின் மின்கம்பங்களும், அதில் காணப்படும் மின்குமிழிகளும் பளுதடைந்து யாருமே கண்டுகொள்ளாத நிலையில் இருப்பதை கணமுடிந்தது. திட்டம் நிறவேற முன் “பராமரிப்பு” தேவைக்கான நிரந்தர பண மூலத்தை தயார்படுத்துவது தொடர்பாக யோசிக்கலாம். அதில் ஒரு அம்சமாக இதை பராமரிக்க உதவும் வியாபார நிலையங்களின் விளம்பரங்கள் வைக்க அனுமதித்து அதற்கு பகரமக அவர்களிடமே இந்த பராமரிப்பு வேலைகளை பகுதி பகுதியாக ஒப்படைக்கலாம். இது ஒரு சிரிய யோசனை மட்டுமே.

  2. Claiming ownership to someone elses child!!! Typical Niyas.Shame on you.We attended that meeting and the Dist. Secretary declared that the proposal being submitted by Hon.MP Mr.Navavi.What Mr.Jewfer Marikkar claimd in his earliar interview with Puttalam Today is absolute Truth.

Leave a Reply

Your email address will not be published.