Special news : ” நாங்களே சபையை வென்றுள்ளோம் எங்களுக்கே புத்தளம் UC..!! பைலுடன் கொழும்பில் மல்லுக் கட்டுகிறார் ஹெக்டர் அப்புஹாமி

· · 1074 Views

நடைப் பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் புத்தளம் நகர சபைத் தேர்தலில் 37 சத வீத  வாக்குகளைப்  பெற்று  தனது  கட்சியே  முதலாவது  வந்துள்ளதால்  நகர சபையின் ஆட்சியை  ஐக்கியத் தேசியக் கட்சிக்கே   வழங்க  வேண்டும்  என  புத்தளம் தொகுதியின்  நகர  அமைப்பாளர்  ஹெக்டேர்  அப்புஹாமி  எம்.பி. பிரதமர்  ரணில்  விக்கிரமசிங்கவிடம்  வலியுறுத்தியுள்ளதாக ஐக்கியத்  தேசியக்  கட்சியின்  முக்கியஸ்தர்  ஒருவர் புத்தளம்  டுடேக்கு  தெரிவித்தார்.

 

 

 

 

இம்முறை  புத்தளம் நகர சபைத் தேர்தலில் தில்லையடியைச் சேர்ந்த தில்ஷான் என்ற முஸ்லிம்  மட்டுமே ஐக்கியத் தேசியக் கட்சிக்கு தெரிவானவர்.பிரதான முஸ்லிம் ஏரியாக்களில் ACMC ,  ACMC சார்ந்த UNP  மற்றும் ஐக்கியத் தேசியக் கட்சியின் உறுப்பினர்கள்  வரிசையாக  தோல்வி  அடைந்திருந்தனர். என்றாலும்  இதனை  தான்  பொருட்டாக கருதவில்லையென  அப்புகாமி  கருதுவதாகவும்  அந்த  முக்கியஸ்தர்  தெரிவித்தார்.

 

 

 

 

 

முஸ்லிம்  வேட்பாளர்கள்  தோற்றுப் போனது  எனது  பிரச்ச்சனை  அல்ல. ஆனால்  நாங்கள்  புத்தளம் நகர சபை  வட்டத்தைக்  கைப்பற்றியுள்ளோம். எனவே  நாங்களே  பிரதானமான  கட்சியாகும். இதன் அடிப்படையில்  எமது  மத்திய   அரசாங்க  பங்காளிக்   கட்சியான  முஸ்லிம்  காங்கிரஸ் எமக்கு  ஒத்துழைப்பு  வழங்க  வேண்டும்  என  தனது  கட்சியின்  தலைவர்  ரணிலிடம்  அவர்  வலியுறுத்தியதாகவும்  கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

கடந்த  பல தசாப்தங்களாக  புத்தளத்திற்கான நேரடி  ஐக்கியத்  தேசியக்  கட்சி  நகர  சபைத்  தலைவர்  ஒருவரை  புத்தளம்  நகர  சபைக்  கொண்டிருக்கவில்லை  என்பதால்  தனது  கட்சி  சார்ப்பான  ஒருவரையே  திரு. அப்புஹாமி  நியமிக்க  விரும்புவதாகவும்  அறிய  முடிகின்றது.

 

 

 

 

 

இந்த  அடிப்படையில்  பிரமுகர்  பட்டியல்  ஊடாக  நகர  சபையின்  உறுப்பினராக நியமிக்கப்படப்போகும்  முன்னாள்  நகர  சபை  தலைவர் சக்ரோப்  மொஹிதீன்  அப்புஹாமி  எம்.பி.யின்  தேர்வாக  இருக்கிறது  என்றும்  ஐக்கியத்  தேசியக்  கட்சியின்  முக்கிய  பிரமுகர்  குறிப்பிட்டார்.

 

 

 

 

 

ஒரு  வேளை  முஸ்லிம்  காங்கிரஸ்  இணக்கப்பாடு  ஒன்றுக்கு  வராவிட்டால் ஐக்கியத்  தேசியக்  கட்சியானது  சுயேட்சைக் குழுவான  பந்து  அணி . ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சி  மற்றும்  நல்லாட்சிக்கான  தேசிய  முன்னணி  போன்ற  கட்சிகளுடன்  இணைந்து  நகர சபையில்  ஆட்சியமைக்கும்  எண்ணத்தில்  இருப்பதாகவும்  அவர்  குறிப்பிட்டார்.

 

3 comments

  1. அப்போ ரவூப் ஹக்கீம் மகிந்த பக்கம் போறதையும்,
    ஆட்சி கவிழப்போவதையும் யாராலும் தடுக்க முடியாது.

  2. வெண்டா எதுக்கு மல்லுக்கட்டணும்?
    ஆட்சியை சந்தோசமா அமைக்க வேண்டியதுதானே? யாரு தடுத்தது?

Leave a Reply

Your email address will not be published.