Special news : “தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் பிர­சாரக் கூட்ட குழப்பமே, ISIS புரளியை கிளப்பியது !! இவர்கள் முஸ்லிம்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா..?

· · 553 Views

காத்­தான்­கு­டியில் கடந்த வெள்­ளி­யன்று இடம்­பெற்ற இரு முஸ்லிம் குழுக்­க­ளுக்கு இடை­யி­லான மோதல் சம்­ப­வத்தின் போது, சர்­வ­தேச தீவி­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு ஆத­ர­வாக ஒரு குழு கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தேசிய உளவுத் துறைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

இந்­நி­லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­ப­டுவோர், குறித்து இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்­பாடு தொடர்பில் ஏற்­க­னவே விசா­ர­ணை­களை செய்து வந்த சிறப்பு உளவுத்துறை குழு அவ­தானம் செலுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

தேசிய உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்­றுள்ள வீடியோ, ஓடியோ ஆதாரங்கள் மற்றும் பல தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக உயர் மட்ட தக­வல்கள் ஊடாக அறிய முடி­கி­றது.

hqdefault (22)

இந்த நிலையில் மதத்தின் பெயரால் தீவி­ர­வாதம், பிரி­வினை வாதத்தை ஊக்­கு­விக்கும் செயற்­பா­டுகள் தொடர்பில் தேசிய உளவுத் துறை­யா­னது தக­வல்­களை பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரி­வுக்கு வழங்கும் எனவும் அத­னூ­டாக சர்­வ­தேச தீவி­ர­வா­தி­க­ளான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கும் உள்­ளூரில் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­போ­ருக்கும் இடை­யிலான தொ­டர்பு குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும் ஏற்­க­னவே இந்த இரு குழு மோதல் தொடர்பில் 10 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்கும் நிலையில், மோதலின் பின்­னணி, நோக்கம்குறித்தும் மட்­டக்­க­ளப்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக சிறப்புக் குழுக்கள் விசா­ரணை செய்து வரு­கின்­றன.

தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் பிர­சாரக் கூட்டம் ஒன்று காத்­தான்­குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்­தியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெ­ற­வி­ருந்த நிலை­யி­லேயே இந்த மோதல் சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது.

இங்கு இடம்­பெற்ற இந்த மோதல் சம்­ப­வத்தில் கத்­திக்­குத்து மற்றும் கல்வீச்சு சம்­ப­வங்­களில் இரண்டு குழுக்­க­ளி­லி­ருந்தும் மூவர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் அதில் கத்­திக்­குத்­துக்கு இலக்­கான ஒருவர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­துடன் கல்­வீச்­சினால் காய­ம­டைந்த இருவர் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே இது தொடர்பில் 10 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.