%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf

Special news : ‘ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!! ஜனாதிபதி, இன்றைய முஸ்லிம் எம்.பி.க்களுக்கிடையிலான சந்திப்பின் போது உறுதி வழங்கினார் –

· · 6897 Views

ஞானசாரரைக் கைது செய்யும் எந்த நடவடிக்கைகளுக்கும்  நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இலங்கை முஸ்லிம் எம்.பி.க்களிடம்   தெரிவித்துள்ளார்.

%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf

நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதி – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ” ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே ஞானசார தேரோ இன்னும் கைது செய்யப்படவில்லை “என முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் நேரடிக் கேள்வி எழுப்பியதற்கே ஜனாதிபதி இந்த மறுப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து முஸ்லிம் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாத இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, குற்றவாளிகளுக்கு எதிராக இன பேதமற்ற நடவடிக்கை எடுக்க தான் சாகல ரத்னாயக்கவிற்கு நேரடியாக உத்தரவிடுவதாக ஜனாதிபதி முஸ்லிம் எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments

  1. இந்த பதில், வேறு யாரும் தடையாக இருப்பார்கள் என்பது போன்ற மாயையை ருவாக்குவது. இது பற்றி விளக்கின் அது ஜனாபதியின் மேல் பாரதூரமஎன்ற ன தாக்கத்தை வெளிப்படுத்தும்.

    மேலும் அநத பதில் எந்த சாதக நிலைப்பாட்டையும் கொண்டதல்ல. சட்டமும் ஒழங்கும் மீறப்படுவது பற்றி கரிசனை கொள்ளாத தனமையை இப்பேச்சு வார்த்தைகள், இழத்தடிப்புகள், சந்திப்புகள் காட்டுகின்றன.

    யாப்பு கூறும், சட்டத்தினால் அனைவரும் பாதுகாக்கப்படுவர் என்ற விதி கதியற்று நிற்பது ஜனாதிபதியின் கட்டளைகள் தேவை என்ற நிலையால் தெளிவாகிறது.

  2. இப்படித் பல தலைவர் கூறினார்கள் ஆனால் எந்த ஒரு நடவடிக்கைகளும் இதுவரைநடைமுறைப்படுத்தப்படவில்லை அவ்வாரு இல்லாமல் இனி வரும் காலங்கலில்லாவாது சாமநீதீயான சுதந்திரமான ஒர் சிறீலங்காவை நாங்கள் எதிர் பார்க்கின்றேம்

Leave a Reply

Your email address will not be published.