Special news :கண்டி வன்முறை சம்பவங்களுக்கு இராணுவத்தினரின் அசமந்த போக்கே காரணம்..!! அமைச்சர் ரவுப் ஹக்கீம் குற்றச்சாட்டு

· · 299 Views

கண்டி வன்முறை சம்பவங்களுக்கு இராணுவத்தினரின் அசமந்த போக்கே காரணம் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினருக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அமைச்சர் இந்த விடயத்தினை முன்வைத்துள்ளார்.

 

 

 

 

விரக்தியை தரக்கூடிய சொற்பதங்களை தடை செய்யாமை, புலனாய்வுத்துறையினரின் அசமந்த போக்கு, தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாமை, ஆகிய காரணங்களே கண்டி தெல்தெனிய வன்முறைகளை அதிகரிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அத்துடன் மேலைத்தேய நாடுகளில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படும் போத அதற்கான மூலக்காரத்தினை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

 

 

எமது நாட்டில் புலனாய்வுத்துறையினரின் மந்த கதியிலான தீர்மானங்களே வன்முறைகளை அதிகரிக்கச்செய்கின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

 

அமைச்சர் ரவுப் ஹக்கீம் இன் கருத்துக்களை செவி மடுத்துக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைச்சரின் கருத்துக்களை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.