Special cover story : புத்தளம் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 1ம்,3ம்,4ம்,5ம் 6ம், 9ம் ரேங்குகளைப் பெற்று சின்ன சாஹிரா விசுவரூபம்..!! 48 மாணவர்கள் சித்தியடைந்தார்கள்

· · 8880 Views

எட்டும் வரை எட்டிப் பிடித்து மேல்   நோக்கிப் போகும்  சக்தி “எட்டாம்” இலக்கத்துக்கு உண்டென்று  எண் சாத்திரத்தில் நம்பிக்கை கொண்டோர் சொல்வார்கள்.  அதுதான் போலும்  தனது எட்டாவது  ஆண்டில் இப்படி ஒரு சாதனையை புத்தளம் ஸாகிரா ஆரம்பப் பாடசாலை நிலைநாட்டியுள்ளது.   ஆரம்பப் பாடசாலை என்று தெரிந்த பின்னர் இந்த சாதனை எந்தப் பரீட்சையில் நிலை  நாட்டப்பட்டது எனச் சொல்ல என்ன தேவை இருக்கிறது? எனவே அதன் பெறுபேறுக‌ளைப் பற்றி மட்டும் பேசுவோம்.

zah

மாவடத்தில்  1,3,4,5. 06, 09 என்ற இடங்களை பெறுவதன் மூலம்தான் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. 06 ஆம்  இடத்தில் 2 இடங்கள் என வலியுறுத்திச் சொல்லாவிட்டால் அந்த நிலைக்கு வந்துள்ள மாணவருக்குச் செய்யும் பாகுபாடு ஆகிவிடும் அல்லவா?

இந்த சிறப்புச் சித்திகளுடன் கூடிய மொத்த சித்திகள் 48.  மொத்தமாக பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு அனுப்ப்பட்ட 290 மாணவர்களுடன் ஒப்பிடும்போது  வீதாசார நோக்கத்தில்  குறை இருப்பதாக யாரும் சுட்டிக் காட்டினால் அதற்கும் செயற் திறமை படைத்த அதிபர் மீரா சாஹிபு ஹில்மி தகுந்த நியாயம் வைத்துள்ளார்.

zah-2

“சல்லடை போட்டு வடித்தெடுத்து  பரீட்சைக்கு மாணவர்களை அனுப்பது வெறுமனே பாடசாலையின்  நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்.  ஆனால்  அப்படிச் செய்வதன் மூலம்  ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக அமைந்து விடும்.  எனவேதான்  05 ஆண்டுப் பிரிவில் பயிலும் எல்லா மாணவர்க‌ளையும் அனுப்புகிறோம்.  மிகவுமே பின்தங்கிய ஒரு மாணவன் கூட 70 புள்ளிகளைப் பெற்றுளார்.

.”இன்று காலை அந்த மாணவன் என்னிடம் வந்து “சேர் நான் 70 மாக்ஸ் எடுத்திருக்கிறேன்”  என்று சொன்னபோது  மாணவனின் முகத்தில் காணப்பட்ட மகிழ்சி என்னை நெகிழச் செய்து விட்டது. எனவேதான் வெறுமனே பாடசாலையில்  சித்தி விகிதத்தை கவனிக்காது எல்லா மாணவர்களுக்கும்  சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம்  எனவே  நாளை எந்த ஒரு மாணவனும் தனது பாடசாலையில் தனக்கு பாகுபாடு காட்டப்பட்டது எனக் குற்றம் சுமத்த முடியாது ” எனச் சொல்கிறார் அதிபர்.

zah-3

”இந்த சாதனைக்கு முற்று முழுவதுமாக அவர்களுக்குப் போதித்த அசிரியர்களையே சாரும் . அவர்கள் தமது சக்திக்கு அப்பாற்பட்டுப் போய்  இந்த இலக்கை அடைய உழைத்தார்கள்.  அவர்கள் படும் சிரமத்தைப் பார்த்த நான் உண்மையிலேயே  கவலை அடைந்துண்டு.  எந்த ஆசிரியரின் பின்னால் சென்றும் அவர்களைத் துரத்தித் துரத்தி வேலை வாங்கும் சிரமத்தை அவர்கள் எனக்கு வைக்கவில்லை என தனது உதவி ஆசிரியர்களைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார் அதிபர் ஹில்மி.

பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் விசேட  வகுப்புகளில் கூட பணம் கட்ட வசதி உள்ள பிள்ளை, வசதி இல்லாத பிள்ளை என பாகுபாடு பார்க்வில்லை.  எல்லோரும் கலந்து கொண்டார்கள் எனச் சொல்கிறார்.

zah-%e0%af%aa

இந்த சாதனைக்கு உறுதணையாக இருந்த இதர காரணிகள் எவை என நாம் கேட்டோம்.  இந்தப் பாடசாலை வடமேல் மாகாணத்திலேயே  மிகப் பெரிய தமிழ் மொழி ஆரம்பப் படசாலையாகும்.  1700 மாணவர்களுக்கு மேல் இங்க கற்கிறார்கள்.

இந்த நிலையிலே  இந்தப் பாடசாலை ஒரு தனியான ஆரம்பப் பாடசாலையாக உருவாக்கப்படாது இருந்திருந்தால்  இந்த சாதனையை அடைய முடியாமல் போயிருக்கும்.

உரிய தருணத்தில் இந்தப் பாடசாலையை சாகிரா தேசிய பாடசாலையில் இருந்து பிரித்து தனியான பாடசாலையாக மாற்ற முன்னாள் நகர பிதாவும், பிரதி அமைச்சருமான கே.ஏ. பாயிஸ் மேற்கொண்ட முயற்சி ஒரு முன்மாதிரியான செயற்பாடு . அதற்காக அவர்  பாராட்டப்பட வேண்டியவர் எனப் பதிலளித்தார்.நேற்றிரவு அவர் தன்னையும், ஆசிரிய ஆசிரியர்களையும் மாணவர்களையும் வாழ்த்திய  போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.

zah-5

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட சாகிரா ஆரம்பப் பாடசாலையை நோக்கி வருடா வருடம் புதிய மாணவர்கள் நூற்றக் கணக்கில் அனுமதி கோரி படையெடுக்கிறார்கள்.  அடுத்த ஆண்டு உள்ளீட்டுக்காக 420 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.  300 பேருக்கு மேல் அனுமதி வழங்க முடியாது.  ஏ‌னவே எல்லோரையும் திருப்திபடுத்த முடியாத நி‌லை.  கடந்த எட்டு ஆண்டுகளில் இப்போதுதான் இப்பாடசாலைக்கு அரசாங்க கட்டிடம் என ஒன்று கிடைத்துள்ளது.  அது தவிர மற்றெல்லாம் இந்த பாடசாலை மாணவரகளின் பெற்றோரின் அர்ப்பணிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் என உணர்ச்சி வசப்பட்டு கூறுகிறார் அதிபர்.

அதிபரை எமது புத்தளம்டுடே குழுமம் செவ்வி கண்டு கொண்டிருந்தபோது  மாவட்டத்தில் 1 ஆம் இடத்தை அடைந்த மாணவன் பாதில் அஹமத் 183 (1ஆம் இடம்) தனது நண்பனுடன்  பெரிய கேக் பெட்டிகளுடன் அதிபரின் அறைக்கு வந்து தமது மகிழ்வைப் பகிர்ந்து கொணடதைக் காண முடிந்தது.அவரை வாஞ்சையுடன்  அணைத்துக் கொண்டார் அதிபர் ஹில்மி.  இந்த பண்பாடுதானே  அவரின், ஆசிரிய ஆசியைகளின், சாஹிராவின் வெற்றி..!!!! ( நமக்கும் ஓசியில் கேக் கிடைத்து. தேங்க்ஸ்.)

நிறையவே இருக்கிறது எழுதுவதற்கு  ஆனால்  எழுதுவதற்கான நேரமும், இடமும் எம்மைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே  அதிபருடன் கைகுலக்கிக் கொண்டோம்.

ஐஸ் வாடி  மதார்ஷாவின் மகன் சாதித்துக் கொண்டிருக்கிறார், ஆர்ப்பாட்டங்கள் இன்றி…..என்பது மட்டும் உண்மை.

எம்.எஸ்.அப்பாஸ் ஷரீப்

புகைப்படங்கள் : ஹஸ்னி அஹமது 

( குறிப்பு மற்றைய பாடசாலைகளின் பெறுபேறுகளை ” puttalamtoday@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் பதிவேற்றம் செய்யப்படும் )

Leave a Reply

Your email address will not be published.