Special Cover story : அரசியல்வாதிகளை நம்பிப் பிரயோசனமில்லை..!!புத்தளம் குப்பைப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்ல முடிவு..!! முதலாவது நாடுகடந்த முறைப்பாட்டுக்கு தயாராகும் புத்தளம்

· · 1021 Views

குப்பை(பு)த்தளம்..

உண்மையில் இது ஒரு இருக்க கூர் கத்தி போன்றதொரு விடயம்.
குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக அனல் மின் நிலையஙாகள் திறக்கப்படுகின்றன.. ஆனால் அவை சூழல் பாதிப்பை மிகப் பாரிய அளவில் ஏற்படுத்தக்கூடியவை.

megapolis-graphic

முன்னமே அனல் மின் நிலையம் நிர்மானிக்கப்பட முன் பாரிய முன்னெடுக்கப்பட்ட போதும் அது அரச உயர்மட்டத்தை பொருத்தவரை சிறு பூச்சியை நசுக்குவது போன்ற இலகுவான ஒன்றாகத்தான் இருந்தது..

ஆனால் பரந்தன் அனல் மின் நிலையப் பிரச்சினை எதிர்கொள்வது இலகுவான ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை..

_dsc2234-2

(புத்தளம் அனல் மின் நிலையம் இன்றும் மூடப்பட வேண்டிய ஒன்று என்பது இரண்டாவது விடயம்)

அனல் மின் நிலையம் கொழும்பிலும் அமைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அரசு ஒரேநாளில் கவிழ்து விடும்.. ஆக இது போன்ற நாதியற்ற பிரதேசம் அரசின் “பூbருவோ” தெரிவாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை..

dsc2211-2-1024x678

அடுத்து குப்பைத்தள விடயத்திற்கு வருவோம்..

பாராளுமன்றத்தில் இதைப்பற்றி கதைத்தாலும் மற்ற மாவட்ட உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன்வரமுடியாது (அவர்கள் மாவட்டம் தொப்பியை போட வேண்டி வருமள்ளவா)

ஆக மக்களாகிய நாம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருனம் இது..

உண்மையில் பிர நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாடு குறைந்தளவு கைத்தொழில் தொழிற்சாலைகளை கொண்ட நாடு.. வெறுமனே இறக்குமதி மீள் சுழற்சி மற்றும் பாவனை கழிவுகளை கொண்ட நாடு..

சிங்கப்பூர் போன்ற மிகக் குறுகிய நிலப்பரப்பை கொண்ட நாடுகள் கூட மிகத்தெளிவான கழிவு வெளியேற்றல் செயன்முறையை கொண்டுள்ளன..

ஆனால் ஆடம்பரங்களுக்காக நதி ஒதுக்கத்தை பாதீட்டில் ( government budget) மேற்கொள்ளும் அரசு இது போன்ற மிக முக்கிய விடயங்களுக்கு ஒதுக்கலாம்..

சகோதரர்களே இது ஒரு சமூகப்பிரச்சினை.. எங்கோ உள்ள குப்பைகளை இங்கே கொட்டி புவியியல் ரீதியில் இந்த கழிவுகளின் நச்சு பல நூரு கிலோமீட்டர்களை தாக்கக்கூடும்..இதனால் அயல் பிரதேசங்களான புத்தளம் , மன்னார் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாரிய நீர், நிள நச்சுத்தன்மையால் ஏற்படும் பாதிப்புக்களை அனுபவிக்க வேண்டி வரலாம்..

பிறக்கும் போதே ஊனமாக பிறக்கும் குழந்தைகள், cancer , மற்றும் நிரந்தர நோய்கள் உள்ள ஒரு சமூகம் நம் கண்முன்னே உருவாக்கிக் கொண்டிருக்கிறது..

இலங்கை அரசு இதற்கு செவி சாய்கா விட்டாலும் ஐக்கிய நாடுகளின் சுகாதார ஸ்தாபனம் (WHO- World Health Organisation) தலையிடும் அளவிற்கு இப்பிரதேச சுற்றுச்சூழல் வெப்பம் அடைந்துள்ளது.. இன்று ஏதோ நச்சு கலந்த வெயிலில் இருப்பது போன்ற உணர்வே வருகின்றது..

உலகின் அதியுஸ்ன வலையமான மத்திய கிழக்கு நாடுகளில் கூட அடிக்கும் வெயிலிலும் ஈரப்பதம் இருக்கும்.. இங்கு அடிப்பது வெயில் மட்டுமல்ல.. சூழல் அமிலத்தன்மை.. இங்குள்ள வளிமண்டலம் கண்டிப்பாக WHO அமைப்பினால் பரிசோதிக்கப்பட்டு உண்மையில் இந்த அனல் மின் நிலையம் நிறுத்தப்பட வோண்டுமா.. இந்த குப்பை பிரச்சினை கண்டிப்பாக மனித வாழ்க்கைச் சழற்சிவிதிகளுக்கு எதிரானது என முத்திரையிடப்பட வேண்டும்..

அணி திரளுங்கள்.. ஒரு வேலை அரசு எமக்கு அநியாயம் செய்ய முயற்சிப்பின் அதற்கு மேல் திட்டங்கள் தீட்டி ஐநா சபைக்கு பொறுப்பான நிறுவனங்கள் மூலமேனும் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எடுப்பதற்கு..

இன்ஷா அல்லாஹ்..

அன்புடன்
யஷார்.
( Please contact me if anyone needed further ideas on this issue).
0768553016

One comment

  1. அனல் மின்சாரம் போன்று இல்லாமல் இம்முறையாவது மக்கள் ஒன்று கூடி இதற்கான முடிவை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.