Special breaking news : ஜேர்மனியில் தனது கிளையை ஆரம்பிக்கிறது புத்தளம் இமாரா மென் பொருள் நிறுவனம் !! ஒரு வரலாற்றுச் சாதனை

· · 2090 Views

ஐரோப்பிய நாடுகளில் நேரடி கால்தடம் பதிக்கிறது புத்தளம் Imara Software Solutions Private Limited

 

புத்தளம் IMARA நிறுவனம்ஜேர்மன்நாட்டின் PERSONLLO மற்றும் DAZZ நிறுவனங்களோடு இணைந்து அதன் பங்காளராக செயற்படுவதற்கான கலந்துரையாடல்.

 

 

 

நேற்று (25.03.2018)KUMUDVELLY நட்சத்திரவிடுதியில் PERSONLLO  மற்றும்  DAZZ  நிறுவனங்களின்  நிறைவேற்று  பணிப்பாளர் Ulfo Unbhaume மற்றும் IMARA வின் நிறைவேற்று பணிப்பாளர்  பொறியியலாளர் Rinsad Ahmed B.Sc. (Eng) Hons, MBA (col) ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 

 

   

கடந்த ஒருவருட காலமாக இரு நிறுவனங்களும் இணைந்து மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது.

 

 

இக்கலந்துரையாடலின் போது, எதிவரும் காலங்களில் மென்பொருள் தயாரிப்பில் இணைந்து செயற்படுதல், அத்துடன் புத்தளம் IMARA நிறுவனத்தின் நேரடி கிளை ஒன்றினையும் மிக விரைவில் ஜெர்மனியில் ஆரம்பித்தல். அதனூடாக ஐரோப்பிய சந்தைக்கும், சர்வதேச சந்தைக்கும் மிக சிறந்த மென்பொருள் உற்பத்திகளை அறிமுகம் செய்தல் போன்ற விடயங்கள் Ulfo Unbhaume யினால் உறுதியளிக்கப்பட்டது.

 

 

2009ல் புத்தளம் நகரில் பொறியியலாளரும், முதுமாணி பட்டதாரியுமானRinsad Ahmed B.Sc. (Eng) Hons, MBA (col), மற்றும் சகோதரர் Saroofi Shaheed ஆகியோர் இணைந்து மூன்று மென்பொருள் பொறியியலாளர்களுடன் (Software Engineers) ஆரம்பிக்கப்பட்ட IMARA நிறுவனம். இன்று சுமார் 30 மென்பொருள் பொறியியலாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கிவருகின்றது.

 

 

கடந்த வருகாலத்தில் சுமார் 1500 அதிகமான சர்வதேச வாடிக்கையாலர்களையும் இதில் அதிகமானோர் அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்த்ரேலியாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை2000 திற்கு அதிகமான மென்பொருள் உற்பத்திகளை (IT Projects)உருவாக்கியுள்ளமை அதன் பிரதான அடைவுகளாகும்.

 

 

 

விஷேடமாக பொறியியலாளர் Rinsad Ahmed மற்றும் அவரோடு இணைந்து ஒரு குடும்பமாக பணியாற்றும் பொறியியலாளர்களின் தொடரான அயராத உழைப்பு இந்நிறுவனத்தை இறைவனின் உதவியால் இன்னுமொரு உயர் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

 

 

 

IMARA வின் உருவாக்கம் பற்றி அதன் ஸ்தாபகரும், நிறைவேற்று பணிப்பாளரும், பொறியியலாளர் Rinsad Ahmed கூறுகையில்.

 

 

 

விசேடமாக புத்தளம் பகுதியில் தகவல் தொழிநுட்பத்துறையில் கற்று வெளியேறுகின்ற மாணவர்களுக்கு சிறந்த களம் ஒன்றினை உருவாக்குதல், சர்வதேச  தரத்திற்கு இம்மண்ணின் மைந்த்தர்களை அடையாளப்படுத்துதல். அதனூடாக புத்தளம் மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தை வளப்படுத்துதல் என்பன பிரதான இலக்காக இருந்தது. இறைவனின் உதவியால் அதன் இலக்குகளை நோக்கி எமது நிறுவனம் நகர்கின்றது என்பது மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது என தெரிவித்தார்.

Best Regards,

Rushdi Ismet
Senior Software Engineer
Imara Software Solutions (Pvt) Ltd

7 comments

  1. Poles weethiyil irunthu sathiththawarhal
    1. Body builder moosin
    2. Hafeel Dr
    3. Mubarak master (Ecologist and social activist)
    4. KAB
    5. Imara
    6. Zanhir master

    Ippadi adukkikkonde pohalam…

Leave a Reply

Your email address will not be published.