Sorry Mr.Maithri : ” தபால் மூல வாக்கெடுப்பில் மொட்டுவுக்கும்..யானைக்கும் கடும் போட்டி !! ஜனாதிபதியின் கட்சி பின் தங்கியது

· · 886 Views

இதுவரை அளிக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பினை ஆராயும்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் அதாவது தாமரை மொட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தெரியவருகிறது.

 

 

தேர்தல்கள் செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் பொலிஸ் நிலையங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (22) முதல் கட்டமாக இடம்பெற்றது. இவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் பொதுஜன முன்னணிக்கே வாக்களித்துள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெற்றியின் காரணமாக தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே இந்த பிரிவினரின் முக்கிய நோக்கமாக உள்ளது. அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவதை விட்டுவிட்டு, அதனை பலவீனப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதையே காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.