Share and care பெண்கள் அமைப்பு மணல் குன்று பாடசாலைக்கு மகத்தான உதவிகளை வழங்கியது..!! பணப் பையை திறந்த மகளிர் – ஒரு மாணவருக்கு தலா ரூபாய் 6000/= பெறுமதியான பொருட்கள், 4000/= ரூபாவிற்கான பண வவுச்சர்

· · 917 Views
உலகம் எங்கும் வாழும் புத்தள பெண்களை இணைத்துக்கொண்டு வெற்றி நடை போடும் ஓர் சமூக சேவை அமைப்பாக  Care & Share கடந்த இரண்டு வருடங்கலாக இயங்கி கொண்டிருக்கின்றது.
அதன் ஸ்தாபகர் ஹசாரா இனாஸ் அவர்கள் புத்தள மக்களின் குறைபாடுகள்,தேவைகளை முடியுமானவரை கண்டறிந்து தனது Care & Share  முகப் புத்தக குழுவினருடன் இணைந்து பல திட்டங்களை புத்தளம் மக்களுக்காக செய்து வருகிறார்.
share care
சென்ற வருடம் போல் இவ் வருடமும்  புத்தளம் மனல்குன்று பாடசாலை மாணவர்களுக்கான பொருட்களை கையளிக்கும் வைபவம் 03.01.2017 அன்று பாடசாலை அதிபர் திரு.M.H.M.ராஸிக்  அவர்களின் தலைமையில், Care & Share உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் சிறப்பாக நடைப் பெற்றது.
IMG-20170103-WA0099
IMG-20170103-WA0110
20170111_073407
இவ் வைபவத்தில்,தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ஐம்பது பேருக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பின்வரும் பொருட்கள் வழங்கப்பட்டன.
• காகிதாதிகள்
•  புத்தகப்பை
•  தண்ணீர் போத்தல்
•   சாப்பாட்டு பெட்டி
•   மாணவருக்கான தைத்த       சீருடைகள்
• காலை உணவிற்கான பணம்
20170111_073658 IMG-20161222-WA0011 IMG-20170104-WA0113
ஒரு மாணவருக்கு தலா ரூபாய் 6000/= பெறுமதியான பொருட்கள்,
 4000/= ரூபாவிற்கான பண வ்வுச்சர் வழங்கப்பட்டது.
இப்பணத்தின் ஊடாக மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான தேவையான காலை உணவு தேவை பூர்த்தி செய்தமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
மனல்குண்று பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்களாக இருக்கின்றார்கள்.அதனால் அவர்களின் குழந்தைகள் பலர் காலை உணவு கூட உன்னாமல்  பாடசாலைக்கு வருவதாக பாடசாலை care & Share அமைப்புக்கு அறியத்தந்தது. இந்த  கவலையான செய்தியை கேட்ட Care & Share பெண்கள் அமைப்பு அவர்களுக்கான காலை உணவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து பாடசாலை நிருவாகத்திற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாவை  இவ்வருடமும் கடந்த வருடத்தை போன்றே வழங்கியது.
இறைவனின் திரு பொருத்தை மட்டுமே மையமாக  வைத்து இயங்கும் care & share, எல்லா திட்டங்களுக்குமான நிதி உதவியினை உள்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் வாழும் உறவினர்கள்,நண்பிகளிடமிருந்து திரட்டி தன்னால் முடியுமான சேவைகளை தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்குவது பாராட்டத்தக்கது.
MMM

Leave a Reply

Your email address will not be published.