Scientific திருட்டு : பிணை முறி விவகாரத்தில் ரவி கருணானயக்காவை கைது செய்ய முடியாது..!! கடைசியில் கையை விரித்தார்கள்

· · 462 Views

பிணைமுறி மோசடி குறித்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

பிணைமுறி மோசடி குறித்து அர்ஜூன் அலோசியஸ், அர்ஜூன் மகேந்திரன், ஜெப் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

 

 

குற்றவியல் நம்பிக்கையை தகர்த்தமை மற்றும் குற்றவியல் நம்பிக்கையற்ற பயன்பாடு ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்படி எந்தவொரு பிடியாணையும் இன்றி இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

எனினும், பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவினால், ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் சட்டமூலத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கெதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவோ, அவரைக் கைதுசெய்யவோ முடியாது என சட்டவல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளதாக சட்டவல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.