Russia 2018 : 2018 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் அணியாக தகுதி பெற்றது பிரேசில் !! பரகுவேயை வீழ்த்தியது

· · 206 Views

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டியில், பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

2018_FIFA_WC.svg

உலகக கிண்ண தகுதிகாண் போட்டியில் 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி முதல் அணியாக தெரிவாகியுள்ளது.

32 அணிகள் பங்கேற்கும் 21 ஆவது உலக கிண் கால்பந்து போட்டி எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரஷ்யாவில் நடை பெறவுள்ளது.

இதற்கான தகுதி காண் போட்டிகள் பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வருவதுடன் தென்னமெரிக்க கண்டத்திற்கான தகுதி காண் சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக் போட்டிகளில் மோதி வருகின்றன.

5 முறை உலக சாம்பியனான பிரேசில். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் பரகுவேயை வீழ்த்தியது.

இதனையடுத்து தகுதி காண் சுற்றுக்களில் வெற்றி பெற்று உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் முதல் அணியாக பிரேசில் தெரிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.