Prado டா : Latest : புத்தளத்து வீதிகளில் பயணிக்கப்போகும் இரு Prado 2017 ஜீப்புகள் !! Black and White

· · 2733 Views

அடுத்து  வரும்நாட்களில் புத்தளத்தின் வீதிகளில் 2017 ம் ஆண்டு மொடல்  டொயோடா  பிராடோ வாகனங்கள் பயணிக்க உள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

2017-Toyota-Land-Cruiser-Prado-rear

ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சம் பெறுமதியான வாகனங்களையே புத்தளத்தின் பிரபல இரு வர்த்தகர்கள்  கொள்வனவு செய்துள்ளனர். இந்த  இரு  வர்த்தகர்களும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதி நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட  மேற்படி Toyota Land Cruiser   பிராடோ  வாகனங்களை நேரடியாக  ஜப்பானில்  இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும்  அச்செய்திகள்  மேலும் தெரிவித்தன.

இதுப் பற்றி பிரபல  வர்த்தக நண்பர்களான  இருவரிடமும் புத்தளம் டுடே  தொடர்பு கொண்டு  கேட்டபோது, அவர்கள் கருத்தெதனையும் தெரிவிக்க விரும்பவில்லை.

அண்மையில்  அகில இலங்கை  மக்கள்    காங்கிரஸ்  கட்சியின் புத்தளம்  அமைப்பாளர்  அலி சப்ரி , ஒரு  பென்ஸ் ரக  ஜீப் ஒன்றைக் கொள்வனவு  செய்திருந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

– Limos

Leave a Reply

Your email address will not be published.