Picnic Destinations : வில்பத்துவின் எப்பகுதிக்கும்…கல்பிட்டிக்கும் ரிலாக்ஸாக ட்ரிப் போக ‘jungle river site camp” -நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தருகிறது – விபரம்

· · 868 Views

“மொறன்டான் வெளி”,   ” மாறக்கம்”,  ”தீத்தக் கல் இறக்கம்”,  ”மூல கண்டான் வெளி”,  ”நொச்சிமுனை”  இவைகலெல்லாம் தலைமுறை  தலை முறையாக  புத்தளத்தின்   “Picnic Destinations” – இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங் கரைகள்.

Image result for jungle river site camp

அன்றாட சோலிகளால் அலுத்துச் சலித்துப் போகும் மனங்களுக்கு அடர்ந்த காடுகளும்,  சில்லென்ற நதிகளும், இயற்கைத்தாய் மடி விரித்த  மணற் கரைகளுமாக  இவை ஈத்து வரும் இன்பம் வார்த்தைகளின் வரையறைக்கு அப்பாற் பட்டவை. இந்த ஆற்றங் கரைகளுக்கு குடும்பம் குடும்பமாகப் போவார்கள்,  கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்  போவார்கள் , தேர்தல் வெற்றியின்,தோல்வியின் பின்னர் அரசியல் வாதிகள் பரிவாரங்களுடன் போவார்கள்.

Image result for jungle river site camp

ஓட்டு மொத்தமாக  இவைகளில் அவர்கள் காணும் இன்பம்  தனி ரகம்.   வாரக் கணக்கில் போய்த் தங்கி, ஆண்களும் பெண்களும் சந்தித்து காதலில் வீழ்ந்து, கல்யாணத்தில் முடிந்த ”ஆயிரத்தோர் இரவுகள்”  போல தித்திக்கும் கதைகள் எல்லாம் ஏராளமாகத் தாராளமாக இருக்கின்றன.  இவைகளெல்லாம் எங்கோ ஓடிப்போய்விட்ட இனியைான காலத்து  நினைவுச் சிதறல்களின் மிச்ச சொச்சங்கள். ஆனால்  அந்த இன்பத்தை அள்ளிப் பருக  இப்போது  நேரம் என்பது  ஒரு பெரும் சவாலாக வந்துவிட்டது. ஏற்பாட்டுப் பிரச்சினை.

Related image

யாருக்குத்தான், எதற்குத்தான் நேரம் இருக்கிறது? நமக்காக யாராவது அந்த ஏற்பாடுகளைச் செய்து தந்தால் நன்றாக இருக்குமே என அவாவுறுகிறோம். குறிப்பாக  வெளிநாடுகளில் இருந்து மாடாய் உழைத்து அலுத்துச் சலித்து  ஊர் பக்கம் வருபவர்களுக்கு  கொஞஞம் thrill ஆக எதைவாவது செய்ய வேண்டும் என்றால் அதை நாமாகச் செய்து கொள்ள முடியாது. யாரின் உதவியாவது நமக்குத் தேவைப்படுகிறது.

எதிர்பாராத விதமாக  அப்படியான  சேவை வழங்குநர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது.  செய்யது ஹுசைன் முகம்மது பைஷல் இவ்வாறான உள்ளுர் உல்லாச பிரயாண ஏற்பாட்டை  கடந்த 2015 செப்டம்பர் முதல் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

Related image

ஆள் , அம்பு சேனை என்பவையெல்லாம் மட்டு மட்டுத்தான். ஒரேயொரு வாகனத்தை வைத்துக் கொண்டுதான்  ஒரு பெரிய சேவையை வெற்றிகரமாக , திருப்திகரமாக  வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பது உரையாடலிலிருந்து தெரிய வருகிறது.

உள்ளுர் ஆறுகள்,  கற்பிட்டி  டொலிபின் சாம்ராஜ்யம், வில்பத்து சரனாலயம்,  குதிரை மலை வரலாற்றப் பிரதேசம் இப்படி இவரது சேவை எல்லை  கணிசமான அளவு பரந்து விரிந்துள்ளது.  தனது சொந்த வாகனத்துக்கு தானே சாரதியாக இருந்து  கச்சிதமாக ஏற்பாட்டு வேலைகளைச்  செய்து வருகிறார்.

Image result for jungle river site camp

ஓய்வுக்காக எங்கு செல்ல உத்தேசம் என்பதை மாத்திரம்தான் நாம் பைஷலின் “River Site Camp” ற்குத் தெரிவிக்க வேண்டும்.  அவ்வளவுதான்  ”ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே”  என்ற படித்தான்  கச்சிதமாக அவர் ஏற்பாடுவேலைகளைச் செய்கிறார்.   வாகனங்களா, சாப்பாடா, குடிப்பா  எதைப் பற்றியும் யாரும் கவலைப்படத் தேவையில்லை.  அவரவர் தேவைக்கு அவரிடம் சொல்லாம், அவரவர் தேவைக்கு எற்றவாறு, பணப் பைக்கு எற்றவாறு உடம்புக்கு நோகாது அவைகளை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

குதிரை மலையைப் பற்றிப் பேசுகிறார்,  அங்குள்ள அடக்கஸ்தலம் பற்றிப் பேசுகிறார். புலிப்படையால் கைவிட்டுச் செல்லப்பட்ட  கொக்கு மோட்டை பங்களா பற்றிப் பேசுகிறார். வில்பத்து சரணாயலத்தின் ஒவ்வொரு அங்குலமும் இவருக்கு அத்துப்படி.  சுவாரிசியமான  அவரது சுற்றுலா ஏற்பாடு பற்றி சொல்லும்போது  ஆ வென வாய் பிழந்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போல் இருக்கிறது.   நாமும் நாலு பேரோடு சேர்ந்து அவரிடம் ஓரு ஏற்பாட்டைச் செய்து கொண்டால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.

rsc

இது வரையில் யாருமே கைவைக்காத ஒரு து‌றையில் துணிந்து கால் வைத்துள்ளார்.  ஆனால்  நாட்கள் செல்லச் செல்லத்தான் அது மெல்ல மெல்ல சிரமமாகி வருவதை உணர்கிறார். இவரது சேவையை  பெற்று அனுபவித்தவர்கள்  மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். அவர்கள் இவர் சேவையை நாடுகிறார்கள் எனவே இவரது சுற்றலா ஏற்பாட்டுத்து‌றை  பிஸியாகிப் போகிறது.

தனது சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஆவல் இருக்கிறது. ஆனால் உள்ளுரிலே அனுபவம் இல்லாத,  தொழில் நேர்மை இல்லாதவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதில் உள்ள அச்சத்தையும் வெளியிடுகிறார்.    ”தொழிலைக் காட்டினாலும் துறையைக் காட்டக் கூடாது” என்பதில் இவருக்கும் உடன்பாடு.

நம்மிடம் தொழிலுக்காக வருபவர்கள்  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது  சேவை பெறுனர்களுக்கு தமது தொலை பேசி இலக்கத்கைத் கொடுத்து  வாடிக்கையாளர்களபை் பிடித்துக் கொள்கிறார்கள்.  இது ஒரு முக்கிய பிரச்சினை என தனது தொழிற் துறை அச்சத்தை வெளியிடுகிறார்.

”வெளிநாட்டுக்காரர்கள் நியைப் பேர் நமது சேவையை நாடுகிறார்கள்.   தொலை பேசி அழைப்புக்கள் வருகின்றன.  உள்ள பிரச்சினை   மொழிப் பிரச்சினைதான்.  அதற்கு அப்பால்  நிறையவே பணம் தேவைப்படுகிறது.  ஒரே ஒரு வாகனம்தான் கைவசம் உள்ளது.  அதுவும்  பழுதடைந்தால்  தொழில் தடை படுகிறது” என்று சொல்லும்போது அவரின் தனி மனிதப் போராட்டத்தின்  சிரமம் நமக்குப் புரிகிறது.

நம்பகத்தன்மையுள்ள முதலீட்டாளர்களுடன் உரிய உடன்படிக்கைகள் மூலம்  முதலீட்டை அதிகரித்து சே‌வையை மேம்படுத்தலாம்.  ஆனாலும் இவரிடம்  காத்திரமான திட்டமோ, வழிகாட்டலோ இல்லாமை நம்மையும் வேதனைப் பட வைக்கிறது.

river

பாரம்பரியமாக புத்தளத்தவர்கள் செய்து வரும் முறையில்  குடும்பம் குடும்பமாக அல்லது கூட்டம் கூட்டமாக ஒரு ஆற்றங்கரையில் போய் இறங்கி  சமைத்துச் சாப்பிட்டு குளித்துவிட்டுத் திரும்பும் முறையில் அல்லாமல் தனது சொந்த  பாணியில் அமைந்த இந்த உல்லாசப் பயணங்களை இவர் எற்பாடு செய்கிறார்.

வீட்டுச் சமயலைகைளில் அடுப்போடும்,  சோற்று சட்டி முட்டிகளுடன் போராடும் பெண்கள் ஆற்றுக்குப் போய் ஆதே காரியங்களைச் செய்தால் அது என்ன  ஒய்வு?   எனவே  நமது வாடிக்கயைாளர்களின்  அந்தத் தேவைகளையும் இவரே ஏற்பாடு செய்கிறார்.

“jungle river site camp ” என்பது அவரின்  வலைப் பக்கம். அந்தப் பக்கத்துக்கு விஜயம் செய்தால்  அவரது சுற்றுலா செயற்பாடு பற்றிய  படங்கள், வீடியோக்கள்  ஏராளம் காணலாம்.  அவற்றிலிருந்  பொறுக்கி எடுத்த நிலவற்றை நாம் இங்கு பிரசுரித்துள்ளோம்.    077 7 101 4 15  என்னும் தொலை பேசியில்  பைசைஷலைத் தொடர்பு கொள்ளலாம்.

அப்பாஸ் ஷரீப்

Leave a Reply

Your email address will not be published.