லண்டனில் புலி மாநாடு..?

· · 175 Views

பிரபாகரன் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் என்னும் அமைப்பினால், லண்டனில் நடத்தப்படும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து வந்த நான்கு இலங்கை விரிவுரையாளர்கள் ஒரு ஈழ ஆதரவு மாநாட்டில் கலந்துகொள்ளவந்ததாகவும், அந்த மாநாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்வதாகவும், ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விரிவுரையாளர்கள் நாடு கடந்த அரசாங்கத்தினால் நடத்தப்படும் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றதாக இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதியான ஜென்ரல் ஜகத் ஜயசூரிய கூறியிருந்தார். … Continue Reading →

Read More

இலங்கையின் காலை வாருமா ரஷ்ய-சீனா..?

· · 129 Views

காலை வாரிய சீன-ரஷ்யா..!!!   இ கச்சதீவு மற்றும் 13வது அரசியல் திருத்தச் சட்டம் சம்பந்தமாக இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் நூறு சத வீதம் இணங்க முடியாது என்றும் அந்த நாடுகள் கூறியுள்ளன. அதேபோல் இலங்கைக்கும், இந்தியாவுக்கு இடையில் ஏற்படும் எந்த பிரச்சினையிலும் தாம் இலங்கைக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் இந்த நாடுகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் இந்த செய்தியை … Continue Reading →

Read More

மங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா..?

· · 156 Views

மங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா..?   இலங்கை அரச புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.எஸ். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கு எதிரான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து அதனை நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச புலனாய்வு பிரிவின் தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா வாகிஷ்ட இந்த அறிக்கை ஒன்றையும் இரண்டு வீடியோ சீடிக்களையும் நேற்று மதியம் கையளித்துள்ளார். மாத்தறையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான … Continue Reading →

Read More

சூரியா,. இனி ..சிதாஸ் வைத்தியசாலை!!!

· · 204 Views

முன்பு புத்தளம் தள வைத்தியசாலைக்கு முன்பு இயங்கிய சூரிய வைதியசாலையானது,இப்போது டாக்டர்.தஸ்லீம் அவர்களால் பொறுப்பேற்கக்கப்பட்டு “சிதாஸ் ” என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்பிருந்த சேவைகளையும் செய்வதோடு, கொழும்பிலிருந்து எல்லா நோய்களுக்குமான விசேட வைத்திய நிபுணர்களின் சேவையும் இங்கு விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. வர்த்தக நோக்கம் மட்டுமின்றி, சேவையையும் நோக்காகக் கொண்டு இப்புதிய சிதாஸ் வைதியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டயல் : 0322266999

Read More

கேரளா கஞ்சா – தலைமன்னாரில் இருந்து!!!!

· · 190 Views

  கேரளாவிலிருந்து தலைமன்னார் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல இடங்களுக்கும் விற்பணை செய்யப்படுகின்றன’ என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். ‘இவ்வாறு கஞ்சாவை மொத்தமாக விற்பணை செய்கின்றவர்கள் மற்றும் அதை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கடத்துகின்றவர்களை கைதுசெய்யவேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண … Continue Reading →

Read More

புத்தளம் பிளாஸ்டிக் சிகிச்சை -3

· · 272 Views

புத்தளம் தள வைத்தியசாலையில் மூன்றாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்கை  இன்று இடம் பெற்றது. வண்ணாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி இனோக்காவிற்கு ( வயது 33 )  இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இரண்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேராவின் மேற் பார்வையில் இடம் பெற்ற இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை கொழும்பு தேசிய  வைத்தியசாலை வைத்திய குழுவினர் நடாத்தி வைத்தனர். புத்தளம் … Continue Reading →

Read More

மூடு விழா – நுரைச்சோலை அனல் மின் நிலையம்!!

· · 180 Views

மூடு விழா – நுரைச்சோலை அனல் மின் நிலையம் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தை, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 3 வாரங்களுக்கு மின்சார கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள வருடாந்த பராமரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அனல்மின் உற்பத்தி நிலையத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இந்த காலப்பகுதியில், மின் உற்பத்தி நிலையத்தின் வருடாந்த பராமரிப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த … Continue Reading →

Read More

மட்டையடிக் குட்டன் ..குட் பை !!!

· · 118 Views

200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்து விட்டார். அடுத்ததாக அவர் 200-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் ஆவலில் இருப்பார் என்று உறுதியாக கூற முடியும். இந்த ஆண்டின் … Continue Reading →

Read More

மார்பகத்தில் வெடிகுண்டு…லண்டனில் பீதி!!!

· · 155 Views

  மார்பகத்தில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு பெண் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்த செய்திகளை அடுத்து லண்டன் விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்குத் துணை போகும் மருத்துவ நிபுணர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெண்களின் மார்பகத்தில் எதுவும் சுலபத்தில் கண்டுபிடித்து விட முடியாத புதிய ரக வெடிகுண்டை பொருத்தி விடுவதாக பிரிட்டன் உளவுத்துறைக்கு செய்திகள் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போல் ஆண் பயங்கரவாதிகளின் குதத்திலும் குண்டை இதேபோல் தெரியாமல் வைக்கும் முயற்சிகளிலும் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் … Continue Reading →

Read More

ஜூனோ விண்கலம், வியாழன் நோக்கி 1,415,794,248 கி.மீ பயணம்!!!

· · 336 Views

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜுபிட்டர் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் தற்போது பாதி தூரத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியக் குடும்பத்தின் பெரிய கிரகமான வியாழன் கிரகத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 1.1 பில்லியன் டாலர் ஆகும். இந்த விண்கலத்தின் பயணகாலமும் ஐந்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று நாசாவில் இருந்து வெளிவந்துள்ள ஒரு அறிக்கையில் … Continue Reading →

Read More

இந்தியாவிற்கு எதிராக இலங்கையை பயன்படுத்தும் தீவிரவாதிகள்….

· · 179 Views

தீவிரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கிப்படுகிறது. இந்திய ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. லக்ஸர் ஈ தொய்பா, தெரீக் ஈ தலிபான் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இயக்கங்களினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என புலனாய்வுப் பிரிவினரை ஆதாரம் காட்டி, செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கள் … Continue Reading →

Read More

புத்தளத்துக்கு வரவிருக்கும் ஆபத்து!!!

· · 145 Views

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை ரயில் வண்டி ஊடக புத்தளத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அதனை எழுவன்குளம், அருவக்காடு சீமெந்து கல் குவரி குழிகளில் கொட்டப்பட இருப்பதாக நம்பத்தகுந்த செய்தி ஒன்று சற்று முன்னர் புத்தளம் டுடேக்கு அறியக்கிடைத்துள்ளது .இச்செய்தி உண்மையானால்,எழுவன்குளம்,கரைதீவு பகுதி நிலங்கள்,நீர் வளங்கள் என்பன பெரும் பாதிப்புகளை  அடையும் என்றும்,விவசாயம் பெரும் பின்னடைவை சந்திக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி தற்போது புத்தளம் டுடே ஆராய்ந்து வருகின்றது.இது பற்றிய முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.

Read More

பிரித் ஓதுங்க..பிரித்து ஒதாதீங்க !!!!

· · 164 Views

இலங்கை பல்லின நாடல்ல. இது பெளத்த சிங்கள நாடு என, பொது பல சேனாவின் தலைவர் வணக்கத்துக்குரிய விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் மூலம் தனது மதவாத, இனவாத கருத்தை சிங்கள மக்களிடம் விதைக்க அவர் முற்பட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் ஊடாக இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்முறைகளும் அட்டூழியங்களும் தொடர்வதை பொது பலசேனா ஆதரிப்பது இங்கு உறுதியாகின்றது. இலங்கையில் இனவாதம் என்ற பேச்சுக்கு … Continue Reading →

Read More

BMW வேண்டுமடா…ஊருவரிகே வன்னிலே எத்தன் !!!

· · 138 Views

தமக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்குவதாக ஆதிவாசிகளை அதிகாரிகள் ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆதிவாசிகளின் தலைவர் முன்வைத்துள்ளார். புதிய வாகனம் தொடர்பாக கலாச்சார அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளின் தலைவரது போக்குவரத்திற்காக வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சர் டீ பி ஏக்கநாயக்க 2012 ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார். அது கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்படுவதாக தெரிவித்த போதும், … Continue Reading →

Read More

பத்ர காளியும்,காலி!! தம்புள்ள கோவிலுக்கும் ஆபத்து !!!

· · 138 Views

தம்புள்ள, கண்டலம சந்தியிலுள்ள மகா பத்ரகாளி கோவிலை அகற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும்  அரங்கேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த கோவிலின் சிலையை  எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களாக இயங்கி வந்த இந்தக் கோவிலில் இறுதி 13 வருடங்கள் தேர்த்திருவிழாவும் இடம்பெற்று வந்துள்ளது.  இந்த நிலையிலேயே தற்போது குறித்த கோயிலை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. … Continue Reading →

Read More