uc-chir

Oops : வட்டார அடிப்படியிலேயே U.C. தேர்தல்..!! புத்தளத்தில் யார் சேர்மன்..? பலரின் கனவுகள் பலிக்குமா..?

· · 615 Views

M.M.Minhaj

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
புதிய தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் நடத்­தப்­படும் என நேற்று கூடிய கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

uc-chir

இந்த கூட்­டத்தின் போது எல்லை நிர்­ணய அறிக்­கையை உரிய முறையில் தன்­னிடம் ஒப்­ப­டைத்தால் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டுவேன் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா எடுத்­து­ரைத்­துள்ளார்.

இதன்­போது எதிர்­வரும் 17 ஆம் திகதி எல்லை நிர்­ணய அறிக்­கையை அமைச்­ச­ரிடம் கையளிப்­ப­தாக கு­ழுவின் தலைவர் அசோக பீரிஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நேற்று பிற்­பகல் கட்சித் தலை­வர்கள் கூட்டம் நடை­பெற்­றது. இந்த கூட்டம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஆரம்­ப­மா­னது.

இந்த கூட்­டத்­தில் அனைத்து கட்­சிகளின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர்.

அத்­துடன் மாகாண மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் தலைவர் அசோக பீரிஸ் உள்­ளிட்ட குழுவின் அங்­கத்­த­வர்­களும் கலந்து கொண்­டனர்

தேர்தல் முறை­மையில் தொகுதி அடிப்­ப­டையில் வட்­டார எல்­லை­களை நிர்­ண­யிக்கும் பணி­க­ளையே எல்லை நிர்­ணய குழு முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இந்த பணிகள் தற்­போது பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் இனிமேல் புதிய தேர்தல் முறை­மையின் ஏனைய அம்­சங்­க­ளி­லுள்ள குறை­பா­டு­களை நிவர்த்தி செய்ய வேண்­டி­யது மாத்­தி­ரமே உள்­ளன. இது தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வரின் கீழ் வழங்­கப்­படும்.

இந்த கூட்­டத்தின்போது மாகாண மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா உரையாற்றுகையில்,
எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை பூர்த்­தி­யான முறையில் எனக்கு பெற்­று­தந்தால் நான் உட­ன­டி­யாக அறிக்­கையை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டுவேன். ஆகவே எல்லை நிர்­ணய அறிக்­கையை அரை­கு­றை­யாக தராமல் பூர­ண­மாக வழங்க வேண்டும் என்றார்.

இந்­நி­லையில் இவ்­வ­ருடம் நடத்­தப்­ப­ட­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை பழைய முறை­மையின் பிர­கா­ர­மின்றி புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் எதிர்­வரும் 17 ஆம் திகதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் வழங்­கு­வ­தாக ஆணைக்­கு­ழுவின் தலைவர் அசோக பீரிஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்­ட­மூலம் தொடர்பில் விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது குறித்த சட்­ட­மூலம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விரி­வான விளக்­க­மொன்றை கட்சி தலை­வர்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் 16 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுவிட்­ஸர்­லாந்து விஜயம் செய்­ய­வுள்­ள­மை­யினால் எதிர்­வரும் 23 ஆம் திகதி பிர­தமர் நாடு திரும்பியவுடன் அடுத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதே நாள் கட்சி தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த விடயங்கள் விரிவாக ஆராயப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.