NOW OPEN FOR ALL — இப்போது புத்தளம் டுடே பத்திரிகைக்கு வாசகர்களும் எழுதலாம் !! ஆதாரபூர்வமான அனைத்தும் பிரசுரமாகும் !!

Puttalam News : Category

இன்றிலிருந்து  புத்தளம் டுடே  இணைய பத்திரிகையானது  அனைத்து வாசகர்களுக்காகவும்  எழுதும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என்பதை  மகிழ்ச்சியுடன்  அறியத்தருகின்றது. கடந்த ஆகஸ்ட்  ௨௦ ம திகதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புத்தளம் டுடே தனது  பரீட்சார்த்த பதிப்புகளின்  மூலம்  அதிகளவிலான  வாசகர்களைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன்  அறியத்தருகின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்,

புத்தளம் டுடே இணைய  இதழானது   கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இதற்காக  யாரும் எழுத முடியும். சமூகத்தில் நடக்கக்கூடிய  அநியாங்களை மற்றவர்களுக்கும்  அறிவிக்கும், , அல்லது அதற்கு எதிராக குரல் கொடுக்க, அல்லது அதற்கு தீர்வு காண என்ற முக்கியமான நோக்கங்களுக்காகவே  இந்த இணையப் பத்திரிகை உருவாக்கப்பட்டது. எனவே சமூக அக்கறை உள்ள எந்த ஒரு தனி மனிதரும் தமது மனக்கிலேசன்களைக் கொட்டும் இடமாக அல்லது அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும். எல்லா விதமான ரகசியங்களும் பேணப்படும்.கட்டுரைகளில் திருத்தம் மேற்கொள்ள, மாற்ற எடிடோரியலுக்கு பூரண அதிகாரம் உண்டு.

ஆக்கனகளை அனுப்புவோர் தமது அடையாள அட்டை இலக்கம், தொலைப்பேசி இலக்கம் என்பவற்றை அனுப்ப வேண்டும், மிகவும் முக்கியமான, பிரச்சினைகளுக்கு  உரிய விடயங்களை அனுப்புபவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை.தகுதியான புகைப்படங்கள்  பிரசுரிக்கப்படும்.

.puttalam

உதாரணமாக ஒரு அரச ஊழியர் லஞ்சம் கேட்டார் என்ற விடயத்தை சமூகத்துக்கு அறிவிக்கும் போது அந்த குறிப்பிட்ட ஆசாமியின்  பெயர், பதவி, சம்பவம்  நடந்த இடம் என்ற அம்சங்களை எமக்கு சொல்லல் வேண்டும்.இந்த சந்தர்ப்பத்தில் மட்டுமே எமக்கு  புலனனைவுகளை மேற்கொள்ள முடியும்.

தயவு செய்து தனிப்பட்ட விருப்ப வெறுப்புகளுக்காக  இத்தளத்தை பயன் படுத்தவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

சிறப்பான கட்டுரைகளுக்கு  சிறியளவிலான  கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படும்.

அனுப்ப வேண்டிய  முகவரி : Email : puttalamtoday@gmail.com

ம.நன்றி : புத்தளம்   லிவிங்  மீடியா நிறுவனம்

(0/5)
  • October 10, 2013
  • No Comments
  • 70 views
 

Post a Facebook Comment

Sponsors

Sponsors