No nanna : கலால் திணைக்களத்தை மங்களவிடம் இருந்து பிடுங்கினார் ஜனாதிபதி !! பெண்கள் பார் விடயம்

· · 712 Views

கலால் திணைக்களத்தை, நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

 

 

பெரும்பாலும் இந்தத் தீர்மானம் இன்றுக்குள் எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. இது ஜனாதிபதியின் தீர்மானம் எனத் தெரியவருகிறது. இதனையடுத்து கலால் திணைக்களத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

 

 

 

 

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர அறிமுகம் செய்த, பியர் விலை குறைப்பு, பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவும், பயன்டுத்தவும் முடியும் என்ற அறிவிப்புக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனால் ஜனாதிபதி மேற்படி தீர்மானித்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் குறித்த அமைச்சுப் பதவி குறித்தும் என்ன நடக்கும் என்ற பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.