police-horse

News break : விரைவில் அமுலுக்கு வரும் 25,000/= தண்டப்பணம் !! சட்டம் அமுலாகியது

· · 291 Views

போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக மேற்கொள்ளும் புதிய தண்டப்பண சட்டமூலம் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

police-horse

தனியார் பஸ் உட்பட போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அனுமதிக்காத, சட்டமூலம் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

அந்தக் குழு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், மோட்டார் வாகன போக்குவரத்து செயலாளர் நாயகம், போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் சட்டமூல திணைக்களம் அதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டமூலத்திற்கு குழுவின் அனுமதி கிடைத்த பின்னர் திருத்தம் மேற்கொண்ட தண்டப்பண பத்திரம் தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சங்கம் மற்றும் போக்குவரத்து துறையின் நிபுணர்களின் கருத்து மற்றும் யோசனையை கருத்தில் கொண்டு இந்த திருத்த தண்டப்பண சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமூலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர் போக்குவரத்து தவறுகள் சிலவற்றிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 25000 தண்டபணம் அறவிடும் நடவடிக்கை விரைவில் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.