News break : டெங்கு காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் நேற்று மட்டும் 45 பேர் அனுமதி !! 145 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை – Dr.R.நகுலனாதன் கவலை

· · 1081 Views

புத்தளம் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

டெங்கு காய்ச்சலால் நேற்றைய தினத்திற்குள் மாத்திரம் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ஆர். நகுலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

145 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய அதுகாரி கூறினார்.

 

 

 

பருவ மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

 

 

 

 

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.