News Break : அலி சப்ரியை படமெடுக்க அனுமதித்த SPO சிக்கலில்..!! அவரின் பிரஜா உரிமை ரத்தாகும்..? மறுக்கிறார் சப்ரி

· · 1163 Views

தற்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும்தேர்தலின்  போது  ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரின்  வாக்களிப்பு  சம்பந்தமான புகைப்படங்கள் வெளியானதை அடுத்து  புத்தளம் சமூர்த்தி வங்கி வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தேர்தல் அதிகாரி சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

 

 

 

 

இன்று காலை இடம் பெற்ற இந்த சம்பவம் சமூக வலைத் தளங்களில் பிரசுரமானதை அடுத்தே மேற்படி வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

 

 

 

 

 

இதுப் பற்றி புத்தளம் டுடேக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் திணைக்கள  கொழும்பு அதிகாரியொருவர் தெரிவிக்கும் போது,

 

 

 

 

” இத்தேர்தலில் நாம் புகைப்படங்கள் எடுப்பதை கண்டிப்பாக தடை செய்திருந்தோம். என்றாலும் புத்தளத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இத்தகைய தேர்தல் சட்ட மீறல் இடம் பெற்றுள்ளது. இது சம்பந்தமான அசையும் அசையாத புகைப் படங்கள் எமக்கு முறைப்பாட்டுடன் கிடைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

இது சம்பந்தமாக நாம் கண்டிப்பாக விசாரணை  நடத்துவோம். என்றாலும் கூட இதனால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் பாதிப்படையப் போவதில்லை. இதனை அனுமதித்த வாக்களிப்பு நிலைய அதிகாரியே இதனால் பாதிப்புக்குள்ளாவார்.

 

 

 

 

குற்றம் நிரூபணமாகும் பட்சம் அவர் தனது வேலையை இழப்பதோடு  7 ஆண்டுகளுக்கு பிரஜா உரிமையை இழக்கும் அபாயமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

இதுப் பற்றி ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர்  அலி சபரியை தொலைப்பேசி ஊடாக தொடர்ப்பு கொண்ட போது.  ” எனது புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வந்ததாக நான் கேள்விப்பட்டேன். இப்புகைப்படங்களை நானோ அல்லது எனது ஆதராவல்களோ எடுக்கவில்லை. அதனால் இதுப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

 

 

 

 

இதேவளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் புகைப்படங்களும்  மீடியாக்களில் வெளியாகி உள்ளமைக் குறிப்பிடத் தக்கது.

 

 

 

வேட்பாளர் சப்ரியின் புகைப்படங்களை பதிவேற்றுவது சட்ட மீறல் என்பதால் அதனை இங்கு பதிவேற்றம் செய்யவில்லை.

One comment

Leave a Reply

Your email address will not be published.