News break : அடுத்த வாரம் சபையை அமைக்கிறார் KAB..!! தனது பங்காளிகளுடன் கூட்டு சேர்கிறார்

· · 2267 Views

முன்னாள்  பிரதி  அமைச்சரும் தற்போதைய  புத்தளம்  நகர சபையின்  காண்காணிப்பு  சேர்மனுமாகிய கே . ஏ. பாயிஸ், தான் அடுத்த வாரத்தில் சபையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

 

 

 

இம்முறை  தாம் ஆளும் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணையாது  தனது பழைய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து சபையை நடாத்தி செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 

 

” நாம் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஆதரவை இது வரை நாடவில்லை. நாம் முன்னாள் ஜனாதிபதியின்  தலைமையிலான மொட்டு கட்சின் இரு ஆசனங்களையும் ,தற்போதைய ஜனாதிபதியின் கட்சியான சுதந்திரக் கட்சியின் 1 ஆசனத்தையும்  NFGG அணியின் ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள உள்ளோம். எனவே இந்தக் கூட்டணியின் 11 ஆசனங்களுடன்  இன்ஷா அல்லாஹ் ஒருங்கிணைந்த சபையாக  புத்தளம் மக்கள் தந்த வெற்றிக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவோம் என்று கூறினார்.

 

 

 

அப்துல் பாயிஸ் கமர்தீன் ஏற்கெனவே இரண்டு தடவைகள் நகர சபையின்  தலைவராக கடமையாற்றியதுடன் முன்னாள் கால் நடை வள அமைச்சராகவும் பனி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

  1. There is a problem I think. It seems that the NFGG has decided to go with UNP and if SLFP, most probably , takes the same way as NFGG than the number split will be 9:9 . Also there is no guarantee that Rauff Hakeem would agree SLMC to accept SLPP to prove majority at the council, if it is the case then the ratio is 7:9 . Making SLPP a partner at the council would damage the big dream of Bais for his future national politics. So once again WHO IS THE CHAIRMAN ? is the big question.

Leave a Reply

Your email address will not be published.