New arrival : “நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்…!!! ஒரு சர்ச்சை

· · 597 Views

நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்

 

 

[  திருமணத்தை எவ்வாறு (மார்க்கம் அனுமதித்துள்ள விதத்தில்) நடத்துவது என்பது அந்தந்த குடும்பத்தாரின் உரிமை. இதில் ஆலிம்கள் வரம்புமீறி மார்க்கம் காட்டித்தராத “தவறான ”துஆ”வை வலுக்கட்டாயமாக ஓதித்தான் ஆவேன் என்பது வரம்புமிறிய செயல்.

 

 

 

 

 

சுன்னத்துக்கு முற்றிலும் மாற்றமான “துஆ”வை ஒப்புவித்து தங்களை “சுன்னத் ஜமா அத்” என்று மார்தட்டிக்கொள்வது நகைப்புக்கிடமாகவே உள்ளது. ”கேள்வி கணக்கு கேட்கப்படும் மறுமை நாளில்” ஒவ்வொரு மணமக்களும் இவர்கள்மீது வழக்கு தொடுப்பதைதான் ஆலிம்கள் விரும்புகின்றனரா?

 

 

 

நூஹு, லூத் ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)

 

 

 

இவ்வசனத்தின் மூலம் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம், நபி லூத் அலைஹிஸ்ஸலாம் இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?

 

 

 

இது திருமண துஆ எனும் பெயரில் புதுமணத்தம்பதிகளைநாமே  சபிப்பது போலல்லவா இருக்கிறது?

 

 

 

யூஸூஃப் அலைஹிஸ்ஸலாமும், ஜுலைகாவும் எப்போது திருமணம் முடித்துக்கொண்டார்கள்? ”(மந்திரியின் மனைவியான) ஜுலைகாவும், யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் போல் வாழுங்கள்” என்பது ஒரு வாழ்த்தா…? வேறொருவரின் மனைவியுடன் ஒரு நபியை இணைத்து அவர்களைப்போல் வாழுங்கள் என்று சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா உங்களுக்கு?! விபரம் தெரிந்தவர்கள் எப்படி ஆமீன் சொல்வார்கள்?

 

 

 

 

மவ்லவிகளே! பதில் சொல்லுங்கள்.  ஒருபோதும் சரியில்லை  என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய, தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?

 

 

 

சில ஆலிம்களைப்பொருத்தவரை நாங்கள் நரகத்திற்கே கூட போனாலும் போவோமே தவிர இந்த துஆவை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக இருப்பார்கள். 

 

 

 

ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்துப்பாருங்கள்… திருமணத்தின்போதே உங்கள் பிள்ளைகள் சாபத்திற்குள்ளாவதை இன்னும் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

One comment

  1. விளங்காமல் செய்கிறார்கள் என்பதற்கில்லை. விளங்கியும் விடாப்பிடியாக செயல் படுகிறார்கள் என்பது விளங்குகின்றது. வேறு நல்ல வார்த்தைகளைக் கொண்டு வாழ்த்தலாமே.

Leave a Reply

Your email address will not be published.