cars-415x260

Morning story : இலங்கையர்கள் ஜப்பான் வாகனங்களை விரும்புவதற்கான 5 காரணங்கள்..!! நம்மவர்களுக்கு ஜப்பான் கார் என்றால் உசுரு

· · 495 Views

ஜப்பானிய வாகனங்களையே அதிகம் காணமுடிகின்றது. இதன் மூலம் இலங்கையர்கள் ஜபானிய வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது.

ஐரோப்பிய நாட்டுகளின் உற்பத்தி வாகனங்களா..? அல்லது ஜப்பான் நாட்டு உற்பத்தி வாகனங்களா? என்றால் எம்மவர்கள் பலரின் தெரிவு ஜப்பானிய வாகனங்களாகவே இருக்கும்.

அதற்கு சாட்சியாகவே, நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள வீதிகளில் ஜப்பானிய வாகனங்களை அதிகம் காணக்கிடைக்கின்றது. அவற்றுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்நிலையில், ஜப்பானிய கார்கள் இலங்கையர்களின் முதற்தர தெரிவாக இருகின்றமைக்கு பின்வரும் விடயங்கள் காரணமாக அமைகின்றது.

cars-415x260

01. நம்பகத்தன்மை

ஜப்பானிய கார்களில் ஒப்பீட்டளவில் பிரச்சினைகள் குறைவு. தொழில்நுட்பக் கோளறுகள் ஏற்பட்டுவது குறைவு. இது பல ஆய்வுகள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

02. விலை மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு

ஜப்பானிய வாகனங்களில் விலை குறைவு. இதனால் இது பலருக்கும் வாய்ப்பாக அமைகின்றது. மேலும் ஜப்பானிய வாகனங்களின் பராமரிப்பு செலவு குறைவு. இதனால் நிறைய பணம் சேமிக்கப்படுகின்றது என்பது உண்மை.

03. நீண்டகால பாவனை

ஜப்பானிய வாகனங்கள் நீண்டகால பாவனைக்கு உகந்தது. இதன் காரணமாகவே பலர் அவற்றை கொள்வனவு செய்கின்றனர்.

சுமார் 2 இலட்சம் 3 இலட்சம் மைல்கள் ஓடிய பின்னரே அவற்றில் சற்று பெரிய கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

04. சிறந்த மைலேஜ்

ஜப்பானிய கார்களின் சாதாரணமாக மைலேஜ் அதிகமாகும். இதனால் வாகன பாவனையாளர்களின் பணம் மீதமாவதுடன், மாசும் குறைவாகும்.

05. மீள் விற்பனைக்கு அதிக விலை/ கேள்வி

ஜப்பான் கார்களை பாவனைக்கு பின்னர் விற்பனை செய்யும் போது அவற்றினை சிறந்த விலைக்கு விற்க முடியும்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கார்களின் மீள் விற்பனைப் பெறுமதியை விட இவற்றினுடையது அதிகமாகும். இவற்றின் விலை அதிரடியாக குறைவதில்லை என்பது அதன் உரிமையாளருக்கு ஒரு நன்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published.