mic

Micro credit : மைக்றோ கடனை திருப்பி செலுத்த முடியாத 3 பிள்ளைகளின் தாய் தற்கொலை..!! புத்தளத்திலும் நடக்கலாம்

· · 946 Views
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா்.
mic
இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த  அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா்.
தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.  அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் தனது  காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவா் விடுதியில் சோ்ததுவிடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
கணவனால்  கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்னுக்கு  பன்னிரண்டு, மூன்று வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுகுடியிருப்பு பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதே வேளை, புத்தளத்தின்  வறிய வகுப்பைச் சேர்ந்த பெண்களும் இந்த நுண் கடனால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பதாக புத்தளம் டுடேக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கடன்களை அடைப்பதற்காக  சில பெண்மணிகள் விபச்சாரம் போன்ற குற்றங்களில்  ஈடுபடுவதாகவும் புத்தளம் டுடேக்கு ரகசிய தகவல் வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மைக்ரோ கடன் பற்றிய பிரச்னையை அறிந்து கொள்வதற்காகவும், குறைந்தளவு கடன்களைக் கொண்டவர்களின் கடன்களை மீள் செலுத்துவது தொடர்பாகவும் உரையாடுவதற்கு  புத்தளம் டுடே உற்பட சமூகத்தின் பிரபல்யங்கள் சிலர் புத்தளத்தின் பெண்கள் அமைப்பான அன்வா மகளிர் அமைப்பினரிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அந்த அமைப்பு, எது விதக் காரணங்களும் இன்றி இந்த வேண்டுகோளை புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக புத்தளம் டுடேக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் மகளிர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், ” அன்வா, கெயார் and செயார் போன்ற அமைப்புகள்  வெறுமனே தம்மை பிரபல்யப்படுத்த மட்டுமே இயங்கி வருவதாகவும், இவர்களின் செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.