
Master blaster : மோசடியாளர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்..!! சங்கக்காரவின் அதிரடிக் கருத்தால் சர்ச்சைகள்
· · 623 Viewsநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து பல அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்ற போதிலும், மக்கள் ஒவ்வொரு முறையும் அரசியல் வாதிகளால் ஏமாற்றங்களை சந்திக்கின்றனர் என்பது மக்களின் கருத்தாக அமைகின்றது.
அந்த வகையில் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நட்சத்திர கிரிக்கட் வீரர் ஒருவர் தெரிவித்த கருத்தினையும் தற்போதைய தேர்தல் களம் உள்வாங்கியுள்ளது.
குறித்த வீரர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியான John Quincy Adams தெரிவித்த கருத்தினை அடியொற்றி இதனை பதிவேற்றம் செய்துள்ளார்..
நீங்கள் இலங்கையில் எந்த பகுதியில் வசித்தாலும் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன.
மோசடியாளர்களை தேர்தெடுப்பதனை தவிர்த்துக்கொள்ள ஒவ்வொரு வாக்களாரும் பொறுப்பாளர்கள் ஆவீர். நற்பிரசைகளினால் ஊழல் மோசடிகள் நிறைந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதிலிருந்து தவிர்த்துக்கொள்வோம்.
இவ்வாறு தெரிவித்த அந்த கிரிக்கட் வீரர் யார் தெரியுமா வாசகர்களே… இலங்கை அணிக்காக அயராது அர்ப்பணித்த முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரதான் அவராவார்.
குமார் சங்கக்காரவின் கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான விமர்சனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தங்களுடைய அரசியல் பிரவேசம் எப்போது நிகழும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.