Latest : கிறிஸ்தவ சமூகத்துடன் மோதத் தயாராகிறார் ஞானசாரர்..!! பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்

· · 719 Views

அர்ஜூன் அலோசியஸ் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல்களில் சம்பாதித்த பணத்தை கொண்டு சிங்கள வர்த்தகர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை கொள்வனவு செய்து சிங்கள விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

MaggieBBS1_600px_15_06_24

அர்ஜூன் அலோசியஸ் தமிழ் கத்தோலிக்கர் என்பதை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு சிங்கள இனவாதத்தை துண்டி, தம்மிடம் இருந்து பறிப்போன இனவாத தலைமைத்துவத்தை மீண்டும் கைப்பற்ற இப்படியான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது பொதுபல சேனா அமைப்பின் வெட்கமற்ற அடையாளத்தை வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ராஜபக்ச ஆட்சியில் அந்த அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் அனுமதியோடு நாட்டில் இனவாதத்தையும் மத வாதத்தையும் பரப்பி சமூகத்தில் நல்லிணக்கத்தை குழித்தோண்டி புதைத்து பகையுணர்வை ஏற்படுத்திய பொதுபல சேனா மீண்டும் தனது அரசியல் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,

மத்திய வங்கியின் ஊழல் மூலம் பணத்தை சம்பாதித்துள்ள அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் நாட்டில் உள்ள சில ஊடகங்களை கொள்வனவு செய்துள்ளார்.

பிணை முறிப்பத்திர மோசடியில் சம்பாதித்த பணத்தில் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் கொள்வனவு செய்துள்ள ஊடகங்கள் என்ன என்பதை தயவு செய்து கூறுமாறு அவர்களை பாதுகாத்து வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கோஷ்டியிடம் கேட்கின்றோம்.

நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் நாட்டின் முக்கியத்துவமிக்க இடங்களில் சிங்களவர்கள் அல்லாதவர்களை நியமித்துள்ளதே எமக்குள்ள பிரச்சினை.

பங்குச் சந்தையில் மூன்று நான்கு பேர் இருந்து கொண்டு அவர்களுக்குரிய நிறுவனங்களை மாத்திரம் கட்டியெழுப்பி வருகின்றனர். இது இடி விழும் அநியாயம்.

சிங்களவர்கள் அல்லாத இவர்களிடம் சிங்கள வர்த்தகர்கள் சம்பந்தமான சகல தகவல்களும் இருக்கின்றன எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, நாட்டில் மறைந்து வரும் இனவாத நிலைப்பாடுகளை மீண்டும் களத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் பொதுபல சேனா அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.