புத்தளம் அரசியல் Streaming : K.A.B. மீண்டும் பல்டி..? மீண்டும் சுதந்திரக் கட்சியில் ஐக்கியமாகிறார்..?

· · 2169 Views

முன்னாள் அமைச்சரும் மு.கா. புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கெ.ஏ.பாயிஸ் மீண்டும் sri லங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக போல்ஸ் வீதி செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

தனது தற்போதைய கட்சியான ஸ்ரீ லங்கா   முஸ்லிம்  காங்கிரஸ் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துக் கேட்பதாக வரும் தகவல்களை அடுத்தே பாயிஸ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஜனாதிபதி தலைமையிலான  ஸ்ரீ  லங்கா  சுதந்திரக்  கட்சியில்  இணைந்து  அடுத்து  வரும் உள்ளூராட்சி  மன்றத்  தேர்தலில்  களமிறங்கவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

 

 

புத்தளம்   நகருக்கு    அறிவிக்காமலேயே  விஜயம் செய்யும்  முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  ரவூப்  ஹக்கீம்    அவர்கள்ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்  இணைந்துக்  கேட்கும்  பட்சத்தில்  தன்னால்  நகர சபைத்  தலைவர்  பதவியை  பெற்றுத்  தருவதற்கான  எந்த  ஒரு  உறுதியையும்  வழங்க  முடியாது  என  தெரிவித்ததை  அடுத்தே  முன்னாள்  அமைச்சர்  கே. ஏ. பாயிஸ்  தனது  தாய்க் கட்சியை நோக்கி  மீண்டும்  பயணிக்கும்  முடிவை  எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது.

 

 

 

இதே வேளை, அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  வரும்  தேர்தலில்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்  இணைந்து  போட்டியிடள்ளதாகவும்  அதன்  அமைப்பாளரும்  நகர  சபை தேர்தலில் பாயிஸின்  முக்கிய போட்டியாளருமான அலி சப்ரிக்கு  உப  தலைவர்  பதவி  ஒன்றை பெற்றுத்  தர  அக்கட்சியின்  தலைவரும்  அமைச்சருமான ரிஷாத்  பதியுத்தீன்  இணங்கியுள்ளதாக  கூறப்படுகிறது.

 

 

 

புத்தளத்தின் பெரும் அரசியல்  குடும்பமான  பீ.டீ. வீட்டு  குடும்ப  சார்ப்பிலான  முன்னாள் நகர சபை  தலைவர்  நஸ்மியையோ  அல்லது  அவரது  சகோதரர் நுஸ்கியையோ  தலைவராக  ஏற்றுக் கொள்ளும்படி  அமைச்சர்  ரிஷாத் அவரின்  அமைப்பாளர்  சப்ரிக்கு  அறிவுறுத்தினார்  என்றும்  செய்திகள்  கூறுகின்றன.

 

 

 

இன்று  காலை தமது  கட்சி  சார்ப்பிலான  புத்தளம்  நகர  சபைக்கான  வேட்பாளர்  பட்டியலை  கையளிக்க சென்றுள்ள  முன்னாள் நகர  சபைத்  தலைவர்  நஸ்மி, தான்  பெரும்பாலும்  நகர  சபைத்  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்புள்ளதாக  புத்தளம்  டுடேக்கு  தெரிவித்தார்.

 

 

–  சர்வர் நைனா 

 

 

 

One comment

  1. இந்த செய்தியில் முதல் பகுதி உண்மையாக இருக்க கூடும்…பின் பகுதி அப்படியே உல்டா பண்ணுங்க…Not Correct

Leave a Reply

Your email address will not be published.