K.A.B.’S கனவுக் கல்லூரி : 11 வைத்தியர்கள்…7 பொறியியலாளர்களை உற்பத்தி செய்து புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி சாதனை !! அதிபர் சிராஜுதீன் பெருமை

· · 1597 Views

இந்த வருடம் இடம்பெற்ற  கல்விப்  பொதுத்தராதர  உயர்  வகுப்புப்  பரீட்சையில்  புத்தளம்  ஜனாதிபதி  விஞ்ஞானக் கல்லூரி சிறந்த  பெறுபேறுகளைப்  பெற்றுள்ளதாக  அக்கல்லூரியின்  அதிபர் சிராஜுதீன்  அவர்கள்  புத்தளம்  டுடே க்குத்  தெரிவித்தார்.

 

 

 

 

இந்த  வருடம்  மொத்தமாக பரீட்சை  எழுதிய   எழுதிய  192  மாணவர்களில்  124  பேர்  சித்தியடந்துள்ளதாக அவர்  கூறினார். சுமார்  11  மாணவர்கள்  வைத்தியத்  துறைக்கும்  7  மாணவர்கள்  பொறியியல்  துறைக்கும்  தெரிவாகியுள்ளதாகவும்  அவர்  கூறினார்.

 

 

பரீட்சைக்குத்  தோற்றியவர்களில்  4  பேர்  A சித்தியகளைப்  பெற்றுள்ள  அதே  நேரம்  4  மாணவர்கள்  மெரிட்  தரத்தில்  பாசாகியுள்ளதாகவும்  அவர் மேலும்  தெரிவித்தார்.

 

 

கடந்த  இரு  வருடங்களாக  கல்லூரியின்  சித்தியடைவு  வேகம்  குறைந்துக்  காணப்பட்டாலும்  கூட  தான்  நடைமுறைப்  படுத்திய  புதிய  திட்டங்களின்  ஊடாக  இந்த  பாரிய  வெற்றியைப்  பெற்றுக்  கொண்டதாகவும்  அவர்  கூறினார்.

 

 

தான்  அதிபராக  பதவி  ஏற்றத்தில்  இருந்து  தனக்கு  எதிரான  பாரிய  சவால்களுக்கு  முகம்  கொடுத்து  இந்த  வெற்றிகளை  அடைந்ததன்  மூலம்  தனது   கடமையை  கூடியளவு  திருப்தியாக  செய்துள்ளதாகவும் அவர் .சுட்டிக்  காட்டினார்.

 

 

 

கடந்த  மகிந்த  ராஜபக்ஷ  அரசாங்கத்தில்;  பிரதி  அமைச்சராக  பதவி  வகித்த  கே.ஏ . பாயிசினால்  அராம்பிக்கப்பட்ட  இந்த  ஜனாதிபதிக்  கல்லூரிக்கு  எதிராக  அன்றையக்  காலக் கட்டத்தில்  கடுமையான  எதிர்ப்புக்கள்  கிளம்பியதுடன்  புத்தளம்  இஸ்லாமிய  அறிஞர்களால்  “விஞ்ஞானக்  கல்லூரிக்கு  எதிராக “பத்வா ” எனப்படும்  மார்க்கத் தீர்ப்பும்  வழங்கப்பட்டது  என்பது  குறிப்பிடத் தக்கது.

 

 

எனினும்  சமூகத்தில்  மிகவும்  பின்  தங்கிக்  காணப்பட்ட  உயர் வகுப்பு  விஞ்ஞான  மற்றும்  கணிதத் துறைகளுக்கான  ஒரு  அடித்தளமாக  இந்த  எதிர்ப்புக்களை  புறந்தள்ளி  ஜனாப். பாயிஸ்  இக்கல்லூரியை  ஆரம்பித்தார்  என்பதும்  நினைவுக்  கூறத்தக்கது.

 

Details :  By Ifras 

 

Puttalam district
Medicine – puttalam science college
Name District rank
1.Juraij -3A 3
2.Felicia-3A 4
3.Rinaza-3A 11
4.Hasna-2A B 13
5.Aseera-2A B 26
6.Afham- A 2B 30
7.Sahla- 2A B 34
8.Inshifa – 2A B 38
9.Rustha -A 2B 44
10.Saajira – 2A B 45
11.Aysha- A 2B 46

ENGINEERING
1. Musab Mahmoodh – 3A 3 (island 85 (super merit)
2. Ashfa – A 2B – 18
3. shadhir -2A B – 2A B 20
4. Shamail Najeeb – A 2B 21
5.Sharaf – 2A B – 23
6. Mifthah A 2B (Private candidate)
7.Najwan 3B – 45

 

Leave a Reply

Your email address will not be published.