Justice For Ashifa : மோடி அவர்களே ஆசிபா விடயத்தில் வாயை திறவுங்கள்..!! காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கர்ஜனை

· · 345 Views

காஷ்மீர் மாநிலத்தில் கதுவா பகுதியில் 8வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி வாய்திறந்து பேச வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

அதேசமயம், கதுவா சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிவேலை என்று மத்திய பிரதேச பாஜக மாநில தலைவர் நந்தகுமார் சவுகான் தெரிவித்துள்ளார்.

 

 

 

காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி 8வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த மாதம் 17-ம் தேதி காட்டுப்பகுதியில் சடலமாக அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். இந்த விவகாரம் தற்போது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

 

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டிவிட்டரில் பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

மரியாதைக்குரிய பிரதமர் மோடி, உங்களுக்கு முக்கியமாக இருக்கும் விஷயத்திலும், நீங்கள் பேசவில்லை. மற்றவர்களுக்கு முக்கியமாக இருக்கும் விஷயத்தலிலும் நீங்கள் கருத்துக்கூறவில்லை. ஆனால், ஆசிபா கூட்டுப்பலாத்கார விஷயத்தில் தயவு செய்து மவுனமாக இருந்துவிடாதீர்கள் பேசுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே மத்தியப்பிரதேச மாநில பாஜக தலைவர் நந்தகுமார் சிங் சவுகான் கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

 

கான்ட்வா நகரில் நந்த்குமார் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

கதுவாவில் 8-வது வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. காஷ்மீர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காகத் தீவிரவாதிகள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு சென்று இருக்கிறார்கள்.

 

பாதிக்கப்பட்ட சிறுமியின் சடலம் இருந்த இடத்தில், ஜெய் ஸ்ரீராம் என்ற சத்தம் முழக்கமிடப்பட்டிருந்தால், அது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதிவேலையாக இருக்கும். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தச் செய்யப்பட்ட சூழ்ச்சியாகும்.

 

காஷ்மீரில் ஒருசதவீதத்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்திறந்து பேசமுடியாது. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி ஜெய் சிறீராம் என்று முழக்கமிட்டு இருக்க முடியும். இந்தச் சம்பவம் உண்மையில் மிகுந்த வேதனைத் தரக்கூடியதுதான். ஆனால், இதில் பாகிஸ்தானுக்கு அதிகமான பங்கிருக்கிறது

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.