Jumping : மகிந்தவின் நம்பிக்கைக்குரிய 7 M.P. க்கள் மைத்திரியுடன் இணைவு..!!

· · 668 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்வுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

7 உறுப்பினர்கள் இவ்வாறு ஜனாதிபதி தரப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

 

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியையும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைப்பதற்கு அண்மைக்காலமாக பேச்சுக்கள் நடந்து வருகின்றன. எனினும், இந்த முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தால், அந்தக் கட்சியுடன் இணைய முடியாது என ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி பிரதான நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் நகர்வுகளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னெடுத்து வருகிறார்.

 

 

 

 

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பாடாத நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள 7 பிரதிநிதிகள் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.