I.P.L. சூதில் அமைச்சர் றிஷாத் 1000 கோடியை இழந்தார் என செய்தி பரப்பியவர்கள் சிக்கினார்கள்..!! CID in action

· · 2445 Views

IPLசூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள்; குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரும்;, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனும்; அமைச்சர் றிசாதுக்கு எதராக இவ்வாறான வேலைகளை மேற்கொண்டுவரும் விடயம் ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ipl-trophy

இவர்களால் இயக்கப்படும் இணையத்தளமொன்றின் ஊடாகவும், முகநூல்கள். வாட்ஸ்அப் குழுமங்கள் ஊடாகவும் இந்தப் போலியான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு – ஊடகக் குழுமம் இந்தச் செய்திகளை சரிபார்த்த பின்னரே இச்செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

சிரேஷ்ட குற்றவியல் சட்டத்தரணி ஒருவர், இவ்விரு இளைஞர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து, குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் இது தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

சவூதியில் இருக்கும் குறித்த நபருக்கு நீதியமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஊடாக அழைப்பாணை மேற்கொள்வதற்கான, ஆவணப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த இரண்டு நபர்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுனர்கள் “டிரேஸ்” பண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By:  srilankamuslims

2 comments

  1. தம்பி ரிஷாத் மட்டும் சுத்தமோ???
    அன்று முஸ்லிம்களின் ஏகோபித்த குரலாக இருந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமை குமாரியுடன் தொடர்பு படுத்தி ஹக்கீமையும், கட்சியை மட்டுமல்ல மொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தித்தானே தனது கட்சிக்கு அத்திவாரத்தையிட்டார்
    இது மாட்டு சரியோ?
    கேக்குறவன் கேனப்பயலா இருந்தால் கரப்பான் பூச்சியும்
    கரத்தை ரேஸ் ஓடுமாம்.

Leave a Reply

Your email address will not be published.