H.M. Builders : நிர்மாணத்துறையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் H.M. பில்டர்ஸ் நிறுவனம்..!! இன்ஸ்டால்மென்ட் முறையில் வீடுகளை அமைத்து தருகிறார்கள்

· · 871 Views

”…………..எங்கே  மூச்ச விடக் கூட நேரம் இல்லையே……………..”  இது தான்  நம் சமகாலத்தவர் அனைவரினதும் கவலையும், பிரச்சினையும். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலே கொஞம் ஆசுவாசமாகத் தூங்கக் கூட பலருக்குக் கிடைப்பதில்லை.   இதனால்தான்  சிலருக்கு  முடிவெட்டிக் கொள்ளவும், நகர வெட்டிக் கொள்ளவும் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது.  சுலைமான் நபிக்கு இருந்தது போன்று   ஜின்களின் உதவிதான் இப்போது எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிறது.   நமது பணியின் ஒரு பகுதியையாவது இன்னொருவர் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் பிறக்கிறது. அந்த ஏக்கத்துக்கு மத்தியிலே  விரயம், திருப்தியின்மை   என்பவைகளும் சேர்ந்து கொள்கின்றன..

ஒரு சிறிய வீட்டை, ஒரு கடையை அல்லது  ஒரு தொழில் நிலையத்தைக் கட்டுவதென்றால் அது நினைத்துக் கூடப் பாரக்க முடியாத காரியம். Herculean task என்று சொல்வார்கள்.  நமக்கு முன் அனுபவம் இல்லாத நிருமாணப் பணிகளை நாமே செய்யலாம் என்று அசட்டுத் துணிவு கொள்ளும்‌ போது  அதற்காக நம்பகமான ஆளணியைத் தேடிக் கொள்வதும்,  கட்டிட நிருமாணப் பொருட்களை தேடிப் பெற்றுக் கொள்வதும்  நம்மை  அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிவிடும். நூறு ரூபாய்களில் முடிக்கக்  கூடியது ஆயிரங்களைத் தாண்டிப் போகிறது.   கவலை இரட்டிப்பாகிறது எனவே  நமக்காக அப்பணிகளைப் பொறுப் பேற்றுச் செய்ய நிருவன ரீதியான உதவி நமக்குத் தேவைப்படுகிறது.

hm

நிருமாணப் பணிகள் துரிதமாக நடக்கும் இந்த நாளைய புத்தளத்தில் அப்பணிகளை பொறுப் பேற்றுச் செய்யும், அல்லது அதற்குத் தேவையான கட்டிட நிருமாணப் பொருட்களை விநியோகிக்கவும் இப்போதெல்லாம் நிறுவனங்கள் ஆங்காங்கு  முளைக்கத் தொடங்கிவிட்டன. அந்த சேவைக்காக தம்மை அர்ப்பணிக்கும் மற்றுமொரு நிறுவனம் “HM  BUILDERS”  புத்தளம் நகரத்தில்,  பிரசித்தி பெற்ற  கங்காணிக் குளம் வீதியில் (K.K. Street) தனது பணிமனைக் கதவுகளை அகலத் திறந்து வைக்கிறது. மங்களகரமான திறப்பு விழாவில் நாமும் கலந்து கொண்டோம்.. கங்காணிக் குளம் வீதியின் தொடக்கம் முதல் முடிவு வரையில்  எல்லாமே  கவர்ச்சிகரமான வர்த்தக நிலையங்களாக மாறிப் போன பின்னர்  மீதமிருந்த ஒன்றிரண்டும் கடைசியாக மாற்றத்துக்குட்படும்போது அங்கிருந்த  மௌலவி  ஹனஸ்  மொகிதீன் அவர்களின் வீடும் ஒரு சேவைப் பணி மனையாக உருவெடுத்துள்ளது.   அவரது மகன் ஆத்தீஃப்  இப்புதிய சேவை நிலையமான   “HM  BUILDERS”  நிறுவனத்தின் பணிப்பாளர்.

hm-2

கட்டி நிருமாண வரை படத் தயாரிப்பு (Hosing Plan),  நிருமான மதிப்பீடுகள் (Estimation)  (BOQ),  நிருமான ஆலோசனைச் சேவைகள் (Consultation Services),  கட்டிடப்  பொருள் விநியோகம் (Building  Material Supply)  போன்ற சேவைகளை நம்பகத் தன்மையுடன் வழங்.குவது இப் புதிய நிறுவனத்தின் குறிக்கோள் என முகாமைத்துவப் பணிப்பாளர் ஆத்திஃப் தெரிவிக்கிறார்.

atheef

முற்றிலும் மாறுபட்ட  விஷேட சேவை

+++++++++++++++++++++++++++++++++++++++

வெளிநாட்டில் மெய்வருந்த உழைத்துச் சேர்த்த பணத்தை நிருமாணப் பணிகளில் ஈடுபடுத்துபவர்கள் அனுவம் இல்லாமை காரமாகவும்,  உதவி ஒத்துழைப்பில்லாமை காரணமாகவும் முகங் கொடுக்கும் வேதனைக்குரிய இழப்புக்களுக்கு  தீர்வு வழங்கும் பொருட்டு HM  Builders அதி விஷேட திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள்.

இவ் விசேட ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது நிருமாணத் தேவைகளை  இந்த நிறுவனத்தின் மூலம் செய்து கொள்ள வசதியாக இருப்பதோடு அதன் பொருட்டு பகுதி கட்டண அடிப்படையில் (Installment) கொடுப்பனவு முறையில் அக்காரியத்தை செய்து கொள்ளலாம்.

இதன் பொருட்டு அவ்வாறான சேவையைப் பெற விரும்புபவர்கள் HM Builders  நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும்.  எனவே  இலட்சக் கணக்கில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான்  தமது நிருமாணக் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற தேவை இல்லாமல் போகிறது.   இது வரையில் யாருக்கும் கிடைக்காத ஒரு சிறந்த முறையை  இதன் மூலம் HM Builders  பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். வீடொன்றைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மாடாய் உழைத்து  கண்ட கண்டவர்களுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றடையும்  வீட்டுப் பணிப் பெண்களுக்கு இது ஒரு  நம்பிக்கைதரும் செய்தியாகும்.

திறப்பு விழாவும்  முதல் வியாபாரமும்

+++++++++++++++++++++++++++++++++

ஒரு வியாபார நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள்  தேவையோ இல்லையோ  ஒரு அடையாள கொள்வனவாக எதையாவது வாங்குவார்கள்.  அப்பொருளின் விலைக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டு பாக்கியை எதரிர்பாரக்க மாட்டார்கள்.   ஆனால்  HM Builders  திறப்பு விழாவில் எதை வாங்குவது? எனவே கௌர நாடாளுமன் உறுப்பினர் நவவி ஹாஜியார் முன்னாள் நகர சபை உறுப்பினர் டீ.என்.எம். அமீன்  எம்.எஸ்.எம் ரபீக் ஆகியோடுடன் சேர்ந்து கற்கண்டும் பேரீச்சம் பழமும்  கேக்கும் சாபிட்டு  மகிழந்தோம்.  ஆனால்  அதற்கு அப்பால் போய்  அகில இலங்கை ஜம்இய்த்துல் உலமாவின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் அலிம் வித்தியாசமான முதற் கொள்வனவை அங்கு செய்து வைத்தார்.

அப்துல்லா மஹ்மூத் ஆலிமின் அடையாளக் கொள்வனவு முன்மாதிரி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திறப்பு விழா செயற்பாடுகளுக்கு மத்தியில் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் வாய் திறந்தபோது சிறு சொற்பொழிவை எதிர்பார்த்‌தோம். ஆனால் அது அவரின்  கொள்வனவப் பிரகடனம் என்பதை யாரும் எதிர்பாரக்கவில்லை.

புத்தளம்தைக்காப் பள்ளியை அறியாபவர்கள் நகரில் யாரும் இருக்க முடியாது.  வரலாறு படைத்த அந்த கட்டிடம் இப்போது  அகில இலங்கை ஜம்இய்ததுல் உலமாவின் நிருவாகத்தில் இருக்கிறது.  அங்கு பாலர் பாடசாலை  புலமைப் பரிசில் வகுப்புக்கள் சிறு சிறு கூட்ட நடவடிக்கைகள் நடக்கும் இடமாக உள்ளது.  அங்கு மூன்று மாடி கட்டிடம் ஒன்றை நிருமாணிக்க  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்திருப்பதால் அதற்கான  வரைபடம் மற்றும் செலவீன மதிப்பீடு செய்யும் பொறுப்பை அவர்  HM Builders  நிறவனத்திடம் ஒப்படைத்தார்.  எனவே இது இந்த புதிய நிறுவனத்துக்கு ஒரு உரைகல்.

முகாமைத்துவப் பணிப்பாரள் பற்றி ஓரிரு வரிகள்

++++++++++++++++++++++++++++++++++++++

‌ஹனஸ் மொகிதீன் ஆத்திஃப் ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில்  பயின்ற   Auto Mobile Engineer.  புத்தளம் PCTT கல்வி நிறவனத்தில் பகுதி நேர  தொழில்நுட்ப  விரிவுரையாளராக  சம்பளம் பெறாத தொண்டர் சேவை செய்து வருகிறார்.  இந்த சமூக ஆர்வலர்   2007 ஆண்டு  தொடக்கம்  நிருமாணப் பொருட்கள் விநியோகத்தில் அனுபவம் பெற்றுள்ளார்.  அந்தத் துறையில் தான் பெற்ற அனுபவமும், ஆர்வமுமே  இந்த புதிய தொழிற் துறையில் அவரை நுழையச் செய்துள்ளது.

நிருமாணப் பணியில் இந்த நிறுவனம் புத்தளத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும் என புத்தளம் டுடே மனமார வாழ்த்துகிறது. HM Builders முகாமைத்துவப் பணிப்பாளர் ஆதிஃப் அவர்கள்  + 9477  840 1400 மற்றும்  +9432 312 3000 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.. அர்களின் மின் அஞ்சல் முகவரி ” hmbuilds@gamial.com

எம்.எஸ்.அப்பாஸ் ஷரீப்

 

Leave a Reply

Your email address will not be published.