Focal Point : ” புத்தளத்துப் பெண்மணிகளின் அரசியல் பிரவேசமும், அமீனா .ஜே. முகம்மதுவும் !!

· · 800 Views

சகோதரி மஷ்கூராவுடன் சேர்ந்து இன்னும் சில பெண்கள் அடுத்து வரும் உள்ளுராட்சித் தேர்தலில் இறங்கக் கூடும் என்ற ஊகம் நகரில் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் முகநூல் சலசலப்பில் இருந்து இது தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அது “ஆகாது” என்று வாதாடியவர்கள் ”பெண்கள் குசினிக்குத்தான் பொருத்தம் ” என்ற முனையில் இருந்துதான் வாதாடினார்கள்.

ஒரு பெண் அரசியலுக்கு வந்தால் அது அவர்களது வாழ்வில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என காட்டுவதன் மூலம் தனிப்பட்ட பெண்களின் பிரச்சினையைச் சமுகப் பிரச்சினையாக்க முற்பட்டனர். ஆனால் உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்.?

amin

நமது நாட்டில் மாத்திரமல்ல பொதுவான உலக நடப்புக்களில் ஆண்கள் பெண்களிடம் தமது நிலையைப் பறிகொடுத்து வருவது பற்றி ஒருவரின் முகநூல் பதிவுக்கு பின்னூட்டமாக எழுதியிருந்தேன். வாகனத்தின் முன் ஆசத்தின் ”ஸ்டியரிங்” இல்லாத பக்கத்தில் அமர்ந்து போக பெண்களுக்கு இடமளித்தவர்கள் ”ஸ்டியரிங் பக்கமாக” பெண்களை அமர்வதைத்தான் இது வரை அரபு மண்ணில் தடை செய்து வந்தார்கள். இப்போது எல்லாம் மாறிப் போய்விட்டது. முதலில் “ஸ்டரிங்” இல் பெண்கள் அமர்வதை அனுமதித்தார்கள். பின்னர் ஊள்ளுராட்சியிலும் பங்கு கொடுத்தார்கள்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தனது பிரதி செயலாளர் நாயகமாக அல்ஜீரியாவின் முன்னாள் சுற்றாடல் அமைசர் அமீனா .ஜே. முகம்மதை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே 2017 முதல் ஒரு முஸ்லிம் பெண்மணி உலகத்தின் First Civil Servant எனக் கருதப்படும் செயலாளர் நாயகத்தின் பிரதி செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டுளார் என்பதை தெரிவித்தால் நமது ” Face-Book Munfthis” என்ன விதமான சன்மார்க்கத் தீர்ப்பு வழங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.