Ever gentlemen: Breaking news : ” நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை !! நவவி எம்.பி. கூறுகிறார் – சபை அமைப்பு ஒன்றுக்கு தான் முயற்சிக்கவில்லை என்கிறார்

· · 1299 Views

நடைபெற்ற  உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் தான் ஆழந்த அதிர்ச்சியில்ருப்பதாக புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம் நவவி எம்.பி. தெரிவித்தார்.

 

 

“எனது எதிர்பார்ப்புக்கள் பொய்த்துவிட்டன…எங்கோ..யாரோ ஒருவர் தவறிழைத்து விட்டோம். அல்லது  தவறு இழைக்கப்பட்டுள்ளது . இது ஒரு எதிர்ப்பார்க்கவே முடியாத தோல்வி. நாம் மொத்த வாக்குகளில்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வென்றிருந்தாலும் வட்டாரங்களை இழந்தது தோல்வி தான் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

” ஐக்கியத் தேசியக் கட்சியிடமும் 7 ஆசனங்கள் இருப்பதால் சபை அமைப்பது சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடுவீர்களா என்று கேட்ட போது:

 

 

 

” இல்லை அதற்கு நான் முயற்சிக்கவில்லை. அதற்கு ஒரு வேளை  ஐக்கியத் தேசியக் கட்சி..அல்லது அதன் அமைப்பாளர் ஹெக்டேர் அப்புஹாமி போன்றோர் முயற்சிக்கலாம். எனக்கு அதில் உடன்பாடில்லை. முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை வென்றிருக்கிறது…என்று  கூறிய  பாராளுமன்ற  உறுப்பினர் , இத்தோடு பேட்டி முடிந்தது என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.