Dr. முனவ்வர் புத்தளம் நகர சபைக்கு களமிறங்குகிறார்..!! கடைசியில் வந்தே விட்டார் டாக்டர் ஐயா

· · 1387 Views

சிரேஷ்ட  வைத்தியரும்  முன்னாள்  அமைச்சர்  கே.ஏ. பாயிஸின்  நெருங்கிய  நண்பருமான டாக்டர். எம்.எஸ்.எம். முனவ்வர் சமீவு  இம்முறை  நடக்கவிருக்கும்  நகர  சபைத்  தேர்தலில்  வேட்பாளராக   களமிறங்க  உள்ளதாக  சற்று  முன்னர்  புத்தளம்  டுடே  இணையத்திற்கு  கூறினார்.

 

இம்முறைத்  தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி  பெரும்பாலும்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்   இணைந்து  போட்டியிடும்  என  செய்திகள்  வரும்  நேரத்தில்  டாக்டர். முனவ்வரும்  ஸ்ரீ  லங்காமுஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி ஊடாக  வாக்குக்  கேட்பதாக  கூறியுள்ளது  திடீர்  \திருப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

” சமூகத்திற்காக  தான்  செய்ய  வேண்டியவை  தற்போதும்  எஞ்சியுள்ளதால்  அவைகளை  அரசியலூடாக  மக்களுக்கு  செய்ய உத்தேசித்துள்ளதாக அவர்  குறிப்பிட்டார்.

 

 

இன்ஷா  அல்லாஹ்  எதிவரும்  தேர்தலில்  தான்  கேட்கும்  பட்சம்  புத்தளம்  மக்கள்  தனக்கு  அவர்களின்  முழுமையான  ஆதரவை  நிச்சயம்  வழங்குவார்கள் என தான்  நம்புவதாகவும்  அவர்  தெரிவித்தார்.

 

 

டாக்ட.ர். முனவ்வர்  பாயிஸின்  பாடசாலைக் கால நண்பர்  என்பதோடு  அவரின்  நெருங்கிய  ஆலோசகராகவும்  செயற்படுகின்றவர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

 

கடந்த  தேர்தல்களில்  அவர்  தனது  நோயாளர்களிடம்  பாயிஸுக்கு  ஆதரவான   பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்  என எதிர்க்கட்சிக்காரர்களால்  குற்றம்   சுமத்தப்பட்டவர்   என்பதும்  குறிப்பிடத் தக்கது.  என்றாலும் டாக்டர். முனவ்வர்  இது  ஒரு  ஆதாரமற்ற  குற்றச்சாட்டு  என  மருத்து  வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.