Cover story : “பூத்துக் குலுங்கும் வெட்டுக்குளம்”..!! அரைகுறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட வெட்டுக் குளத்திற்கு உயிர் கொடுக்கும் மூவர் அணி ..!!!

· · 3275 Views

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வெட்டுக்குளம் பக்கமாகப் ‌போனேன் . மரகத பச்சை நிற ‌வெட்டுக் குள நீரில் முங்கி எழுந்தோடி வந்து ‌ஸ்பரசித்த காலை இளம் காற்றின் குளிர்மை,  ஆர்ந்த அமைதியில் கிடந்த குளக் கரையில் ஊரறிந்த நல்ல ஆசிரியர் மர்ஹும் சீனிமுத்து அஹமது மாஸ்டரின் கடைசிப் புதல்வர்  ஸியாத்  புற்தரைக்கும்,  செடி கொடிகளுக்கும் தண்ணீர் இறைக்கும் காட்சி அந்த நேரத்தில் உண்மையிலேயே மனோரம்மியமாக இருந்தது.  ‌

we-4

we

சற்று நேரத்துக்கெல்லாம்  மழை நீரும், சாக்கடை நீரும் கலந்ததால் பச்சை வண்ணக் கோலங் கொண்ட  வெட்டுக்குளத்தை கண்ணுக்குக் குளிர்ச்சியான பிரதேசமாக்க அவருடன் தோலோடு தோல்  சேர நிற்கும்  ஜப்பார், ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவன் ரபீக் ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.  இந்த மூன்றுபேருமாகச் சேர்ந்த வெட்டுக் குளத்தைச் சற்றி ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

சில தலை முறைகள் கண்டும். அதனுள் முங்கிக் குளித்தும் வந்துள்ள வெட்டுக் குளத்தின் வரலாறுப் பதிவு மிகத் தெளிவாக இல்லை.   அந்தக் குளத்திலிருந்து  ஒரு சில நூறு மீற்றர்க்ள தூரத்தில் கம்பீரமாக நின்றிருக்கப் பலரும் கண்டு வந்த எழில்  வண்ண  ” காஸிம் பெலஸ்” என்ற மரைக்கார் ஜமீன்தாரின் வீட்டை கட்ட மண்கொடுத்த குளம் என்பதுதான் பலரது எண்ணம்.   அது சரியாக இருக்குமா எனக் கேட்க  புத்தளம் பிரதி கல்விப் பணிபாளர் ஷன்ஹீர் அவர்கரை கைபேசியில் அழைத்தேன்;

we-3

”மண்ணும், கல்லும் மற்றெல்லா கட்டிடப் பொருட்களும் தாராளமாகவும், ஏராளமாகவும் கிடைத்த காலத்தில் அந்த மாளியையைக் கட்டுவதற்கு  வெட்டுக் குளத்தை் தோண்டி இருக்க முடியுமா  என்பது அவரது சந்தேகம்.  அயினும் மனிதர் கொஞ்சம் சிர‌மம் பட்டு தனது தாய் மாமன்  புத்தளம் வரலாற்ற ஆசிரியர் மர்ஹும் ஏ.என்.எம். சாஜஹான் அவர்களால்   1980களில்  ”கலை அமுதம்” என்ற சஞ்சிகைக்கு எழுதப்பட்ட 12 பக்க புகுத்தளத்து குளங்கள் பற்றிய ஆக்கத்தைத் தேடி எடுத்து பக்கங்களபை் புரட்டிப் புரட்டி  தந்த தகவலின் பிரகாரம் அந்த நாட்களிலே  புத்தளத்தில் இருந்ததாக பதியப்பட்டுள்ள சுமார் 20 குளங்களில் ஒன்றுதான் இந்த வெட்டுக் குளம் என்ற முடிவுக்கு வரக் கூடியதாக இருந்தது. 

நகரில் நாலா பக்கங்களிலும் உள்ள  சதுப்பு நிலங்களையும், தாழ் நிலங்களையும் நிரப்ப மண் வெட்டியதால் இந்த வெட்டுள் குளம் உருவானது என்பது வரலாற்றாசிரியர்  சாஜஹான் அவர்களின் கருதுகோல்.   எனவே  ”காஸிம் பெலஸ்” நிருமாணத்துக்கு இதன் பங்களிப்பு கணிசமானதாக இருந்திருக்கலாம். காஸிம் பெயலஸ் போய்விட்டது. அதற்கு மண் கொடுத்த வெட்டுக் குளம் இன்னும் பசுமை யாய்க் கிடக்கிறது, என்றாலும் வெட்டுக் குளத்திலும்  பாதியைக்  காணோம்.

வட்ட வடிவ அழனா ஒற்றைக் கண் போன்று நின்ற வெட்டுக் குளம் களங்கப்பட்டு போனதாக நினைத்து  பழுதடைந்த கண்ணை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முயல்வது போல அதை மண்போட்டு நிரப்ப அப்போதைய நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் முயன்றாலும்  வெட்டுக் குளமோ அவருக்கு பணிந்து போக மறுத்தது.  சாதனை வீரர் பாயிஸ் தோல்வியைத்  ஏற்றுக் கொண்டு அதை தொந்தரவு செய்யாமல் எட்டிப் போய்விட்டார்.  பழுதுபட்டாலும் அதற்கு மையிட்டு எழிலூட்ட  முன்வந்தவர்கள்தான்   ஸியாத், ஜப்பார் என்ற இரு நகர வர்த்தகர்களும், ரபீக் என்ற ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவரும், எதிர்கால வைத்தியருமான ரிபாயும்.

கைமாறு கருதா சமுகப் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மூவரும்  வைகறை நேர இறை  வழிபாட்டை முடித்த கையோடு கிழக்கு வெளுத்ததிலிருந்து   ஒவ்வொருநாளும் வெட்டுக் குளத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு சில மணித்தியாலங்களை அதனுடன் செலவு செய்கிறார்கள்.  நிழல் மரங்களாலும்,  பூஞ் செடிகளாலும் புதுப் பொலிவு பெறுகிறது  வெட்டுக் குளம்.

ஒரு சிறிய  தண்ணீர் பம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது,  புல் நறுக்கும்  வி‌சைப் பொறியும் இருக்கிறது இவற்றை ஆயுதமாகக் கொண்டுதான் இந்த மூவரும் தமது கலை உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாரகள்.  முப்பதாயிரம்  வரையில் அந்த உபகரணங்களுக்காக செலவானதாம்.  இரண்டொரு பரோபகாரிகள் அதற்கான நிதி உதவியைச் செய்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த மூவரும் மேற்கொள்ளும் தன்னலமற்ற பணி சவால்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது.  குளக் கரையில் குப்பை தட்டுவோருடன் போராட்டம் நடாத்த வேண்டி இருந்ததையும், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் குளக் கரையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில்  வண்ண வண்ண மலர்கள் அலர்ந்து தென்றலில் சதிராடிச் சிரிக்கின்றன.   குப்பை தட்ட வேண்டாம் என்ற வேண்டுகோள் பலகை  அந்த முயற்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.   ஆயினும் இன்னுமொரு பக்கத்தில் குப்பைகள் காணப்படுகின்றன.   அங்கும்  பூஞ்செடிகளை நாட்டி நிலைமையைக் கட்டப்படுத்த முடியும் என அந்த கலை ஆர்வலர்கள் மூவரும் கருதுகிறார்கள்.

தன்னை படம் எடுக்க வேண்டாம் என்று விடாப் பிடியாக நின்ற இளையவர் ரபீக்கை படத்தில் இடம் பெற வைக்க போதும் போதும் என்றாகிவிட்டது.  ஆயினும்  பின்னர் அவர் குளக் கரையில் திரண்டிருந்த குப்பைகளை குப்பை வாரியால் இழுத்தெடுக்கும் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் தெரியாமலேயே ஒரு படத்தை எடுத்துக் கொண்டேன்.

muhs

குளத்தைச் சுற்றி சாடிகளில் 80 பூஞ் செடிகளை வைத்துள்ளார்கள். ஒவ்வொன்றும்  70 ருபாவாம். அத்தனையும் அவர்களின் சொந்தப் பணமாம்.  இத்தனைக்கும் இவர்களுக்குக் கிடைப்பது ஒரு ஆத்தார்த்த திருப்திதான். வெட்டுக் குளத்து நீரின் குளிர்மைபோல வெட்டுக் குளத்தின் புதிய கோலம் காண்கின்ற கண்களும் , மனங்களும் சில்லெனக் குளிரந்து போகின்றன.

சீனிமுத்து மாஸ்டரின் கடைசிப் புதல்வர் ஸியாத் கை தேரந்த வாகன மெக்கானிக்.  ”ஜேர்மன் டெக்கில்” வாகனத் தொழில்நுட்பம் கற்று  இலங்கை போக்கவரத்துச் சபையின் தொழில் நுட்பப் பிரிவில் கடமையாற்றி, பின்னர் சொந்த வாகனம் திருத்தும் நிலையத்தையும் நடாத்தி இப்போது வாகன உதிரிப்  பாகங்களை விற்பனை செய்யம் வர்த்தக நிலையத்தை நடாத்துகிறார்.   இது வரையில்  நம்மில் பலருக்கும் தெரியாத வெட்டுக் குளத்தின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறார்.

நகரில் தீ விபத்து ஏற்பட்டால்  தீயணைக்கும் முயற்சிகளுக்குத் தேவையான  நீரை இந்த வெட்டுக் குளம்தான் இது வரையில் கொடுத்து வருகிறதாம்.  நகர சத்தி சேவையின் போது சுத்தி சேவை குழுமத்தினர் குழாய்கள் ஊடாக அதிக அளவு நீரைச் செலுத்தித் துப்புரவு செய்யம் வேலைகளுக்கும் வெட்டுக் குளமே நீர் தருகிறதாம்.  இந்தப் பணிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் நீரை சிரமமின்றிப் பெற்றுக் கொள்ள இந்த குளம்தான் கை கொடுக்கிறதாம்.  எனவே இந்த குளத்தை நாம் இளந்துவிடக் கூடாது என்பது அவரின் தர்க்க நியாயம்.  நியாயமே தான்.

wettukul

வெட்டுக் குளம் மையவாடிக்கு வரு‌வோருக்கும், அண்மையில் உள்ள திருமண விழா மண்டபத்துக்கு வருவோருக்கும் சற்ற ஆசுவாசமாக இளைப்பாற வெட்டுக் குளம் இப்போதெல்லாம் உதவுவதால் இப்போது அது எல்லோரையும் கவரந்து வருவதாக வெட்டுக்குளத்தை மெருகூட்டும் மூவரும் பெருமயுடன் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

எதிர்காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச்  பட்டியலிட்டுச்  சொல்கிறாரகள். குளத்தைச் சற்றி மின் விளக்ககள் பொருத்தல். இருக்கைகள் அமைத்தல்,  குளத்தின் மையப் பகுதயில்  சிறவர்களக்கான நீர் விளையாட்டு பொழுத போக்கு அம்சங்களை ஏற்படுத்தல் இப்படி அந்த பட்டியல் நீள்வதாகத் தெரிகிறது.  ஆயினும் அதற்கொல்லாம் அவரகளை நோக்கி உதவிக் கரங்கள் நீள வேண்டாமா?

பாயிஸின் கொழும்பு முகத் திடலுக்குப் பின் வெட்டுக் குளம்  ம‌னோரம்மியமான ஒரு இளைப்பாற்று இடமாக ‌ஏற்கனவே உருவாகத் தொடங்கிவிட்டது.

காலை, மாலை வேளைகளில் மக்கள் ஓட வேண்டும், நடக்க வேண்டும் . அதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்த பின்னர் ஒரு விளையாட்டு வீரரதான தான்  முதலில் குளத்தைச் சுற்றி ஓடியும் நடந்து மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியைக் காட்ட இருப்பதாக  ஜெப்பார் தெரிவிக்கிறார்.

சொல்லவும், செல்லக் கேட்டு எழுதவும் நிறையவே இருக்கின்றன ஆனாலும்   Time and Space  ஒரு பிரச்சினைதான். எனவே வெட்டுக் குளத்தைச் சுற்றி பசுமைப் பரட்சியை நடாத்திக் கொண்டிருக்கும் மூவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டேன்.

எம்.எஸ். அப்பாஸ்  ஷரீப்

( Senior news editor )

 

3 comments

Leave a Reply

Your email address will not be published.